என் மலர்
நீங்கள் தேடியது "infiltration"
- இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
- 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'
வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.
கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
- 2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
- மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத குடியேற்றம் நிறுத்தப்படும் என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோல் சோதனைச்சாவடியில் புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது அமித்ஷா பேசியதாவது:
இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தச் சோதனைச்சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
எல்லைப் பகுதியில் சட்டரீதியாக உலவமுடியாதபோது சட்டவிரோத ஊடுருவல் அதிகமாகிறது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.
2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதன்பின் ஊடுருவல் நிறுத்தப்பட்டு அமைதி தானாக வரும். அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்பட்டால் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.