என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரியில்"

    • கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஞான தீபம் கல்லூரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிட்டோ கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் காசநோய் எவ்வாறு வருகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு காசநோய் வராமல் தடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காசநோய்க்கு என்னென்ன மருந்துகள் உட்கொள்ளலாம் போன்றவற்றினை குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் வெட்டுமணி அரசு மருத்துவமனை சுகாதார பார்வையாளர்கள் சாந்தி மற்றும் அகிலா ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சிஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானதீபம் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம், காவல்கிணறு சந்திப்பில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியின் 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெ ற்றது. விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் சிறப்புகளை பற்றி பாராட்டியதோடு, கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவ-மாணவிகளிடையே கல்விப்பணியை ஆற்றி ஒரு கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    விழாவில் ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வி ஞ்ஞானி டாக்டர் மஞ்சு கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் ஆராய்ச்சித்து றையில் மேற்படிப்பினை தொடர வேண்டும் அறிவுறு த்தினார்.

    விழாவில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் சிறப்புரை யாற்றி னார். கல்லூரி இயக்குனர் டாக்டர் பாக்கியராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூ முருப்பல் மற்றும் துணை மற்றும் உதவி முதல்வர்கள், பேராசி ரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். கடந்த 30-ந்தேதி நடை பெற்ற கல்லூரி விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், டி.வி. புகழ், டாக்டர் ஸ்ரீதர் சேனாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார்.
    • ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்த்திடும் பொருட்டு ஐக்யூஎசி சார்பாக ஆளுமைத்திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார். இயல்பிலேயே இருக்கும் தங்கள் திறமைகளை மாணவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது, கண்டு கொண்ட திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் முறைகள், பயிற்சி, தேடல் குறித்தும், மாறி வரும் சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கு அத்திறன்கள் எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும், பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    • வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில்
    • புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி யில் புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செயற்கை தொழில் நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்த னர்.இதனை பின்ஒஸ் மென் பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்கு னரும் பொறியாளருமான அருண் ராஜிவ் சங்கரன் தொடங்கி வைத்து மாணவி களுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முறைகள் பற்றி பயிற்சியளித்தார்.

    கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நுண்ணறிவு தொழில் நுட்பம் எதிர் காலத்தில் அனைவராலும் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பமாகும். எனவே மாணவிகள் இந்த தொழில் நுட்பத்தில் திறமை யை வளர்த்து கொண்டால் எதிர் காலத்தில் சிறந்து விளங்கலாம் என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்தி பேசினார். மேலும் இந்த கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவி களுக்கு கேடயமும், சான்றி தழ்களும் மற்றும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களும் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் தருண் சுரத், துறை தலைவி சுனிதா, நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பேரா சிரியை செரினா மற்றும் பெனடிட் டோனா, பேரா சிரிய-பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது

    நாகர்கோவில் : கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்குகிறார். எம்.செந்தில் குமார், தினேஷ் குமார், சந்திர செல்வம், நாகேந்திரன், பி. செந்தில் குமார், சிவா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ் வரவேற்று பேசுகிறார்.

    சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பச்சைமால், சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தாஸ், ரமேஷ் , நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி.செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நஜிமுதீன், ஸ்டாலின், கிங்ஸ்லி ஜெரால்டு , ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
    • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    நாகர்கோவில்:

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

    கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    குமாரபாளையம்: 

    குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

    ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

    சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
    ×