என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்களிப்பு"

    • இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
    • எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

    எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவுகூறும் வகையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கிய கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் 'தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக உமறுப்புலவர், தாயுமானவர், சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள போப் ஜான்பால் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    இக்கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட த்திலுள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    திருப்பூர்:

    தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரி கே.ஜி.முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, புத்தகம் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    ஓ.என்.ஜி.சி. சமூக பங்களிப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட வன உயிரின காப்பாளர் அலுவலக கட்டிடத்தினையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலந்தரவை ஊராட்சி தெற்கூர் கிராமத்தில் ரூ.32.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தினையும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் திறந்து வைத்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுந்தரமுடையன் மற்றும் நாகாச்சி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி தோட்டக்கலை பண்ணையின் பயன்பாட்டிற்கான வாகனத்தையும், உச்சிப்புளி, தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஆர். எஸ். மங்கலம், தொண்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.15.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரங்ணகளை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டரிடம் வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலத்தில் கடல் பசு உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறையின் ராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம் காப்பாளர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் “ உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் போன்களுக்கான ஆன்ட்ராய்டு செயலி ‘காம்பா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கடல் பசுவினை பாதுகாக்க ‘‘சேவ்டுகோங்’’ என்ற ஆன்ட்ராய்டு செயலியை கலெக்டர் சங்கர் லால் குமாவத்  தொடங்கி வைத்தார்.

    இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்களை உயிருடன் மீட்டு, மீண்டும் கடலில் விடும் காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கலாம்.அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக சன்மானம் மற்றும் பரிசுத்தொகை பெறலாம். 

    கடல் பசுக்களை பாதுகாக்க, மிகப்பெரிய அளவில் மீனவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் பெறுவதற்கு இந்த மொபைல் செயலி பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சுரேஷ், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரதாப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் யாதவா, அனுராக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×