என் மலர்
முகப்பு » work
நீங்கள் தேடியது "work"
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பாக்கு வெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 30).இவர் ஐ.டி.ஐ.படித்து முடித்துள்ளார். தற்போது முதுகுளத்தூரில் உள்ள கேஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் இணைய தளத்தில் ஏர்போர்ட் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 12- ந்தேதி ராமரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வேலை வாய்ப்பு பதிவு குறித்து விபரம் கேட்டு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் அதற்கான பதிவு கட்டணம் மற்றும் பல்வேறு காரணங்களை கூறி ரூ. 96 ஆயிரத்து 950 கேட்டுள்ளார். அதனை அவர் தெரிவித்த அவர்களால் தெரிவிக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு ராமர் அனுப்பி உள்ளார். வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஒரு வருடம் ஆகியும் எவ்வித தகவலும் இல்லாத தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விசாரித்த போது போலி நபர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் ராமர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
×
X