என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிந்த சுற்றுலா பயணிகள்"

    • கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
    • மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட வரும் இளம்ஜோடிகள் வருகை அதிகமாக உள்ளது. மோயர் சதுக்கம், பைன்மரக்காடு, குணா குகை, பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு குழாம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில வாரங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
    • குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார த்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடை க்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாததாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அருவிக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.

    இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர். சிலர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தேங்கிய தண்ணீரில் குளித்து வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர். மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 10 நாட்களில் அருவி வறண்டு போகும் அபாயம் உள்ளது

    • நேற்று வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 300 கன அடி ஆக இருந்த நிலையில், இன்று காலை ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
    • பரிசில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை காலங்களில் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம்.

    அந்த வகையில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் தருமபுரி மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    ஆயில் மசாஜ் செய்தும், நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    மேலும் நேற்று வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 300 கன அடி ஆக இருந்த நிலையில், இன்று காலை ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பரிசில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள, ஒகேனக்கல் சிறு வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள், மற்றும் மீன் சமையலர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
    • அருவிகளை தண்ணீர் விழுவதை சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்தவாறு கண்டு கழித்தனர்.

    ஒகேனக்கல்,

    தமிழகத்தில் மிகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினங்களிலும் வார விடுமுறை தினங்களிலும் ஒகேனக்கல் வந்து செல்வது வழக்கம்.

    கோடை விடுமுறை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் தினம் தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை பரிசல் சவாரி செய்தும், ஆயில் மசாஜ் செய்தனர். அருவிகளை தண்ணீர் விழுவதை சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்தவாறு கண்டு கழித்தனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    • தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
    • விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கி றார்கள்.

    இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை முதலே பொதுமக்கள் பலர் வந்து சென்றனர். இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழ மை) விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

    ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் இளைஞர்கள் உள்பட பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.
    • விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் மலை ஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் ஏரிச்சாலையை சுற்றி ஏராளமானோர் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். தூண்பாறை பகுதியில் யானைகள் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகன ங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்து.

    சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிக சுற்றுலா பயணிகள் வந்ததால் சிறு குறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே மாதம்கோடை கால சீசனாகும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை கவரும் விதமாக கோடை விழா மலர்க்கண்காட்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஆப் சீசன் எனப்படும் 2வது சீசன் நடைபெறும். அப்போது குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், குணாகுகை, பிரையண்ட் பார்க், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, அப்சர்வேட்டரி பகுதிகளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் பகல் பொழுதில் இதமான வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் என இதமான சீதோசனத்தை அனுபவித்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோவில், பழனிமலை காட்சிப்பகுதி, மன்னவனூர் எழும்பள்ளம் ஏரி, கூக்கால் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி விளங்குகிறது. இதற்காக வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் ஏரியை சுற்றி சவாரி செய்ய சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் யானைகள் குட்டிகளுடன் அங்கு முகாமிட்டதால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகள் பேரிஜம் ஏரிப்பகுதியிலேயே சுற்றி வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆர்வமுடன் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஏற்காடு கோடைவிழாவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணாபூங்காவில் மலர்களை கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45-வது  கோடை விழா நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கோடை விழாவை காண வருகை தந்தனர். அண்ணா பூங்காவில் அமைந்துள்ள சுமார் 5 லட்சம் மலர்களை கண்டுகளித்தனர்.

    மலர்களால் வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், பேருந்து போன்றவைகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    தமிழ்நாடு அரசு சார்பாக அமைக்கப்பட்ட துறை சார்ந்த விளக்க கூடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஊராட்சிகள் சார்பாக அமைக்கபட்டுள்ள காட்சி கூடத்தில் கிராம சபா எவ்வாறு மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை விளக்கும் விதமாக காட்சி அமைக்கபப்ட்டு உள்ளது. 

    மேலும் இந்திய அஞ்சல் துறை சார்பாக அமைக்கப்பட்ட விளக்க கூடத்தில் சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, புதிய வகை ஸ்டாம்ப் அஞ்சல் துறையில் மக்கள் எவ்வாறு சேமிப்பது குறித்து விளக்கம் உள்ளது. இதே போல் சுகாதார துறை, ஆவின், காதி, பொன்னி, சத்துணவு போன்ற விளக்க கூட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 

    இன்று காலை சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டியும்,  இளஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பாக இளைஞர்களுககான விளையாட்டு போட்டிகள்  மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    ×