என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332508
நீங்கள் தேடியது "கல்லணை"
தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்வு
×

X