என் மலர்
நீங்கள் தேடியது "Bear"
- ஆழ்வார்குறிச்சி அருகே 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது.
- மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவபத்மநாதன் சந்தித்து நலம் விசாரித்தார்.
தென்காசி:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகிய 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவி தொகை வழங்கினார்.
அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் விரைவில் நிவாரண தொகை பெற்றுத் தரப்படும் எனவும் சிவபத்மநாதன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார். முன்னதாக அவர் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசினார். உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான முழு உதவியும் பெற்று தரப்படும் என அவர் கூறினார். அப்போது நாகேந்திரன் மகன் சங்கரநாராயணன், சைலப்பன் மகன்கள் பாஸ்கர் , மணிகண்டன், வைகுண்ட மணி மகள் அம்பலம் , மாரியப்பன், பொன் மோகன், மாயாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
- பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
நெல்லை:
கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேற்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.டி.காமராஜ், நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் தளவை சுந்தரராஜ், ராஜவேல், இளங்கோ, எம்.எம்.சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் பால்கனி, நிர்வாகிகள் குபேந்திரா மணி, ராதா, சீவலப்பேரி முருகேசன், பால்பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக செல்லும் சாலை விளங்குகிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கரடி ஒன்று அங்குள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றது. இதை கண்ட வளர்ப்பு நாய் குரைக்க தொடங்கியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை ஒளிர செய்துவிட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது கரடி உலா வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, அதன்பிறகு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதேபோன்று அந்த பகுதிக்கு செல்லும் சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
- கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி
அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.
- பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி முக்கிய நகர பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வருவதாகவும், அந்த கரடி இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் புகார்கள் எழுந்தது. ஆனால் தற்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் அருகிலேயே அந்த கரடி உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரம் பணியில் இருந்த காவலர்கள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு கரடி ஒன்று நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கரடியை பார்த்து கூச்சலிடவே அந்த கரடி அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று மறைந்தது. போலீஸ் நிலையம் அருகில் கரடி சுற்றி திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை யில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகள் உலா வந்துள்ளது. எனவே அப்பகுதியில் வனத்து றையினர் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்கா ணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவும் இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு கல்லாடா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கோவை சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
வீட்டின் சமையல் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனடியாக அவர் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது கரடி ஒன்று வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் வெளியில் சென்று சத்தம் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.
பின்னர் கரடியை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கரடி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.
ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூண்டு வைத்து பிடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
- கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.
- கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடையம்:
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் 3 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடி கடித்து குதறியது.
இந்நிலையில் கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் டொமினிக் ராஜன் (வயது 63) என்பவரது தோப்பில் கடந்த 12-ந்தேதி இரவில் கரடி புகுந்து அங்கிருந்த 6 தேன் கூடுகளை சேதப்படுத்தியது.
இதையடுத்து கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். எனினும் கரடி சிக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் ரகுமானியாபுரம் பகுதியில் நாய் குரைப்பது அதிகமாக காணப்படுகிறது.
எனவே இப்பகுதியில் கரடி நடமாடுவதாலேயே நாய் குரைப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கரடி நடமாடிய தோப்பு அருகே அருந்ததியர் காலனி உள்ளது. இப்பகுதி மக்களும் பீதியுடனே காணப்படுகின்றனர். அருகிலுள்ள மைலப்பபுரம் பகுதியில் ஒருவரின் தோப்பில் காணப்பட்ட தேன் கூடுகளையும் கரடி சேதப்படுத்தி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால், மதுப்பிரியர்கள் சிலர் இரவில் அங்கேயே போதையில் தூங்கி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வன அலுவலர்கள் கரடி நடமாடுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே மஞ்சுவிளை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் 20-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
இந்த வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயிகள் ஜேம்ஸ், பால்ராஜ் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே வாழை தோட்டங்களுக்குள் உலா வந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், கரடிகள் நாசம் செய்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சமீபகாலமாக காட்டுப்பன்றி, கடமான், கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
- மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
- சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து கரடி மாயமானது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.
இந்த நிலையில் மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து மாயமானது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அந்த கரடியை வீடியோ எடுத்துள்ளனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மாஞ்சோலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளியை தாக்கியது.
- தெரு நாய்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது
- அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராம மற்றும் நகர பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உணவு தேடி கரடிகள் தினந்தோறும் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதியில் ரெயில் வேக்கு சொந்தமான ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதன் அருகாமையில் குன்னூர் பஸ் நிலையம் மற்றும் மலை ரெயில் நிலையமும், அமைந்துள்ளது. இதனிடையே இரவு கரடி ஒன்று பூட்டி இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே செல்லமுயன்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் வரவே கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அங்கிருந்த உணவு பொருட்கள் வீணாகாமல் தப்பியது. இச்சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கரடி வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது. குன்னூர் பஸ் நிலையம் பகுதியில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக வந்து சென்றது. அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
- பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.
இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.