என் மலர்
நீங்கள் தேடியது "தோட்டக்கலைத்துறை"
- தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறை யில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர். பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவு ரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வில் டாக்டர். பிருந்தாதேவி கூறியதாவது:-
பண்ணை பகுதிகளில் நெகிழி குப்பைகள் இல்லா வண்ணம் அனைவரும் பராமரிக்க வேண்டும். பண்ணையில் தாய் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரிக்க வேண்டும். இலவங்க பட்டை மரங்களை பராமரிக்க முன்னுரிமை கொடுத்து அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் பதப்படுத்தும் அலகி னை பண்ணையிலும் விவசாயிகளும் தொடர்ந்து பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் தெரி வித்தார்.
இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) மு.வ சரண்யா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், அருண்குமார், நந்தினி மற்றும் தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
- கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும்.
குடிமங்கலம் :
குடிமங்கலம் வட்டாரத்தில் கொத்தமல்லி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
நறுமணப்பயிர்களில் கொத்தமல்லி விளைவிக்க ஏற்ற தட்ப வெப்ப நிலை, குடிமங்கலம் வட்டாரத்தில் நிலவுவதால் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.கொத்தமல்லி இலை, வாசனை எண்ணெய் எடுக்கவும், துவையல், சட்னி, சாலட், சூப், ஊறுகாய் தயாரிக்கவும், கொத்தமல்லி தண்டு, விதையும் பயன்படுகிறது.வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக கோ - 5 முதல், கோ - 7 வரையிலான ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ - 5 ரகமானது 35 நாட்களில் கொத்தமல்லி இலை உகந்ததாகவும், ஒரு ஹெக்டருக்கு 4.70 டன் மகசூல் கொடுக்கிறது. மேலும் இந்த ரகம் காரீப் மற்றும் ராபி பருவத்திற்கு ஏற்றதாகும்.கொத்தமல்லி ரகங்கள் கோடை பருவத்தில் இலைக்காகவும், உலர் மற்றும் அதிக வெப்பம் இல்லாத பருவத்தில் விதைக்காகவும் பயிரிடலாம்.பூ பூக்கும் பருவத்திலும் விதை முளைப்பதற்கும் அதிக பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஹெக்டருக்கு இறவை சாகுபடிக்கு 10 - 12 கிலோ விதையும், மானாவாரி சாகுபடிக்கு 20 - 25 கிலோ விதையும் தேவைப்படுகிறது.
நோயைக்கட்டுப்படுத்த டிரைகோடர்மா பூஞ்சானை கொல்லி, ஒரு கிலோவுக்கு 4 கிராம் வீதம் பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் அல்லது டை மெத்தலேட் பயன்படுத்தினால் அசுவினி, மாவுப்பூச்சி, செதில் பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோயை கட்டுப்படுத்த சல்பர் துகள், ஒரு கிலோ அல்லது 250 மில்லி டினோ கேப் என்ற பூஞ்சாண கொல்லியை பயன்படுத்தலாம்.கொத்தமல்லி விதைகள் 100 முதல் 150 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த இடை வெளி கிராமங்களுக்கு கிராமங்கள் வேறு பட்டு இருக்கும்.கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும். விரைவில் அழுகும் தன்மை உடையதால், குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரத்திற்கு சேமிப்பை நீடிக்கலாம்.விதை சேமிப்பவர்கள் அறுவடை செய்த செடிகளை ஓரிரு நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து, ஈரப்பதம் 18 சதவீதம் வரும் வரை வைத்து விதைகளை பிரித்து 9 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை காய வைத்து, அதற்கு பின் சேமித்து வைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன.
- பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
குடிமங்கலம் :
காய்கறி மற்றும் பழத்தோட்டங்களில் தேனீ வளர்த்தால் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலை த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது :- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன. இந்த விபரம் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.தேனீக்கள் காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளில் உள்ள பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
பல்வேறு மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது மகரந்த கலப்பு ஏற்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பது நல்லது.இதன் மூலம் தோட்டப்பயிர்களின் மகசூல் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்தோடு தேன் மூலமும் வருமானம் கிடைக்கும்.தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்க்கும் பெட்டி, மானிய விலையில் வழங்கப்படு கிறது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்ப ட்டன. இந்த ஆண்டு இரண்டாயிரம் தேனீ பெட்டிகள், தேன் பூச்சியுடன் வழங்கப்படுகிறது. தேனை பிரித்து எடுக்கும் கருவியும் மானியத்தில் பெறலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டப்பணி யாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தோட்டக்கலைப் பண்ணை திம்மாபுரம் மற்றும் ஜீனூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. தோட்டம் அமைத்தல், அலங்கார தாவரங்களை கொண்டு நில எழிலூட்டுதல் ஆகிய பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி முடிவின் போது பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது 49 தோட்டப் பணியாளர்களுக்கு 25 நாட்கள் கால அளவை கொண்டு வழங்கிடும்படி திட்ட வழிகாட்டி நெறிமுறை பெறப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி இப்பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
இதில் நிலமற்ற தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தேவையான செயல்விளக்க உபகரணங்கள் மற்றும் பயிற்சி பொருட்கள் ஆகியவை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை நகல், 8-ம் வகுப்பு கல்வித்தகுதிச் சான்று ஆகிய ஆவணங் களுடன், அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.