என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைப்பணி"

    • புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
    • கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் கடும் அவதி
    • நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

    பாலவிளை, ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலகங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள். இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர்.

    மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம டைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது.

    மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால் தான் தீக்குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

    இருப்பினும் அந்த சாலை சீரமைக்க படாத நிலையே கிடந்துள்ளது. சாலை சீரமைக்கபடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாதவாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர்.

    மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ங்களும் பொதுமக்களும் 2 கிலோமீட்டர் சுற்றி மாற்று பாதை வழியாக சென்று வந்தனர். மேலும் குழித்துறை நகராட்சி நிர்வாகமும் அந்த வார்டு கவுன்சிலரும் சேர்ந்து இந்த சாலை பணியில் பல முறைகேடுகள் செய்ததாக ஊர் மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சூழலில் அந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டு மெதுவாக செய்யப்பட்டு வருகிறது. பாலவிளை ஈத்தவிளை சாலை ½ கிலோமீட்டர் தான் உள்ளது. இந்த தூரத்தில் உள்ள சாலை பணியை செய்ய 5 நாட்களே போதுமானது. ஆனால் நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.

    மேலம் 2 மாதங்களாக மாற்று பாதை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளா கியுள் னர். மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பால விளை ஈத்த விளை சாலையில் அலங்கார கற்கள் பதித்தது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாதவாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைபணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொது மக்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பெரியகுளத்தில் சாலை வசதிக்காக புதர்களை அகற்றியபோது வனத்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பெரியூர். இந்த ஊரானது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவின் வெள்ளகெவி ஊராட்சியில் உள்ளது. ஆனால் பெரியூர் மலை கிராம மக்கள் பெரியகுளம் பகுதியில் இருந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாத நிலையில் நடந்தே அங்கு விளைவிக்கும் விளைபொருட்களைக் கொண்டு வருவதும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் 1882-ம்  ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது அந்தப் பகுதிக்கு சாலை அமைப்பதற்கான ரைட் ஆப் உரிமத்தை வழங்கியுள்ளனர். அதன் பின்பு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் இதுவரையில் தமிழக அரசு சாலை அமைத்து தராத நிலையில் அவர்கள் செல்லும் பாதை முழுவதும் புதர் மண்டி இருப்பதால் மக்கள் செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் பெரியூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து அவர்கள் செல்லும் மலைப்பாதையில் உள்ள புதர்களை அகற்றி சாலையை சீரமைப்பதற்காக  100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதையில் இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
     
    இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் போக்குவரத்துக்கு இடை–யூறாக உள்ள புதர்களை பொதுமக்கள் அகற்றுவதை தடுத்து நிறுத்தி மலை கிராம மக்களை தேவதானப்பட்டி வனத்துறை அலுவலக–த்திற்கு அனைவரும் வரவேண்டும் என கூறியதால் அங்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் மலைகிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது சம்மந்தமாக மலை கிராம மக்கள் கூறுகையில், இதுவரையில் சாலை வசதி இல்லாததால் தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கூட ரூ.400 முதல் ரூ.500 செலவழித்து அதை குதிரையின் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

    பெண்கள் பிரசவ காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முடியாத அவலநிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். வயதானவர் நோய்வா–ய்ப்பட்டால் அவர்களை கொண்டு செல்ல முடியாத நிலையில்  உள்ளோம். தொடர்ந்து மலை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத நிலையில் இருக்கிறோம்.

    தற்போது மகப்பேறு காலத்தில் கூட தடுப்பு ஊசி செலுத்த முடியவில்லை. இதுவரை பல்வேறு அரசு அதிகாரிகளிடம் எடுத்துகூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    எனவே தமிழக அரசு பெரியூர் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    மடத்துக்குளம்:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளை, உள்தணிக்கை, கோப்பு குறித்த ஆய்வு மற்றும் கள ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாராபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் பல்வேறு ரோடுகளில் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    மடத்துக்குளம் உட்கோட்டம், மாவட்ட முக்கிய சாலையான உடுமலை-கொமரலிங்கம் ரோட்டில் 2 கி.மீ., தொலைவுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர், நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஈரோடு கோட்ட பொறியாளர் வத்சலா, தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.


    ×