என் மலர்
நீங்கள் தேடியது "Tournament"
- மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி நடந்தது
- உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்:
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மகளிருக்கான புதிய விளையாட்டுகளான சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.
சாலையோர சைக்கிள் போட்டியில் 14 வயதில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேரழகி முதலிடத்தையும், பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவி தியா இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுல்லா முதலிடத்தையும், கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிகா முதல் பரிசினையும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா இரண்டாம் பரிசினையும், கிழுமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தோஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
ஜூடோ போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜான்சிராணி முதலிடத்தையும், அகரம் புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிகா இரண்டாம் இடத்தையும், சிலம்பம் போட்டியில் புதுவேட்டடக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருலதா முதலிடத்தையும், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி இரண்டாம் இடத்தையும், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லம்மாள் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.
இந்த போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
- இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது
- இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
சேலம்:
இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
தமிழ்நாடு அணி சார்பில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பாரதியார் கலை அறிவியல் கல்லூரி மாணவி கார்த்திகா, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.
இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனை தொடர்ந்து அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த 2 வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று அழகாபுரத்தில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சேலத்தை சேர்ந்த 2 வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநில இறகு பந்து போட்டிக்கு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
சிவகங்கை
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.
இதில் 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
பரமத்திவேலூர்:
நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் உடற் கல்வித் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கலந்து கொண்ட அணிகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசினார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
கபடி போட்டிகளை கந்தசாமி கண்டர் அறநிலையத்துறை தலைவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் கல்லூரி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் கல்லூரி 2-ம் பரிசையும், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி 3-ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி நிர்வாகம் செய்திருந்ததது.
- ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.
- சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சேலம்:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான வழியனுப்பு விழா ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் ஜெயஸ்ரீ, பள்ளி தாளாளர் தினேஷ், பள்ளி முதல்வர் பவுல் பிரான்சிஸ் சேவியர், மணியனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், ஏ.எம்.பப்ளிக் பள்ளி முதல்வர் பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாநில உட்பால் கோல்ப் செயலாளர் மாங்க் பிரசாத், துணை செயலாளர் திலகம் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பெரம்பலூர்
உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,330 குறட்பாக்களையும் மனனம் (மனப்பாடம்) செய்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி 2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி மாலைக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்."
- முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும்.
- மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்
விளையாட்டு போட்டிகள் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்-பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்க www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும். எனவே மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவுசெய்திட வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
பல பயன்கள் உள்ளது தேவையான தங்களது ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே பதிவுகள் மேற்கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றால் இதன் மூலம் பல பயன்கள் உள்ளது. எனவே தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்கள் அனைத்து விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
- அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
- முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.
காரைக்குடி
அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.
சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.
- இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
- 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.
முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 29ம்தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.
பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற் கான கால அவகாசம் வரும் 29-ந் தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை சைக்கிள் போலோ சங்க தலைவர் சத்தியராஜ், சங்க நிறுவனர் பாஸ்கரன், செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடங்கியது
- கரூர் டி.எஸ்.பி. தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார்.
கரூர்:
கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், கரூர் பிஎன்ஐ இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் தொடங்கியது. முதல்போட்டியில் சாய் ஸ்போர்ட்ஸ் சென்டர் சட்டீஸ்கர் அணியும், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் மோதின. வீராங்கனைகளை அறிமுகத்திற்கு பின்னர் கரூர் டிஎஸ்பி தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, தலைவர் கார்த்தி, துணைத் தலைவர் குழந்தைவேல், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பிஎன்ஐ நிர்வாகிகள், கரூர் நகர பிரமுகர்கள், கூடைப் பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.