என் மலர்
நீங்கள் தேடியது "ஜடேஜா"
- சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
- நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார்.
ஐபிஎல்லில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்:-
ரவீந்திர ஜடேஜா - 3001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்
ஆண்ட்ரே ரசல் - 2488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்
அக்சர் படேல் - 1675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்
சுனில் நரைன் - 1578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்
டுவைன் பிராவோ - 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்
- ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும்.
- ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
சென்னை:
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.
அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.
- ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
- டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.
மும்பை:
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.
- இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார்.
- இந்தியாவின் கபில் தேவ் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் சிறப்பாக ஆடிய அந்த அணி 91 ரன்கள் எடுத்த போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்திய கவாஜாவை ஜடேஜா வெளியேற்றினார்.
இதன் மூலம் குறைந்த போட்டிகளில் பந்து வீச்சில் 250 விக்கெட்டும் பேட்டிங்கில் 2500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
இந்தியாவின் கபில் தேவ் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார். இவர் 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது இடத்தில் இம்ரான் கான் (64 போட்டிகள்) உள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என் நண்பரை 24 மணிநேரமும் பின்தொடர்கிறேன் என்று கூறினார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர் நாதன் லயன் மட்டுமே.
ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் "என் நண்பர் நாதன் லயனை 24 மணிநேரம் பின்தொடர்கிறேன்" என்று கூறினார்.
- சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
- டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார்.
34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட்டை தொட்டார். 500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார். இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் வீரர் கபில்தேவ் ஆவார்.
ஜடேஜா 63 டெஸ்டில் 263 விக்கெட்டும், 171 ஒரு நாள் போட்டியில் 189 விக்கெட்டும், 64 இருபது ஓவர் ஆட்டத்தில் 51 விக்கெட்டும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 503 விக்கெட் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் விவரம்:-
கபில்தேவ், ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜேக் காலிஸ், போல்லாக் (தென் ஆப்பிரிக்கா), இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்ரிடி (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), சமிந்தா வாஸ் (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூ சிலாந்து), ஷகீப் அல் ஹாசன் (வங்காளதேசம்).
- மார்னஸ் லபுஷேன் களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.
- அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்க்க காரணமாக அமைந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூர் ஆடுகளம் முதல் ஓவரிலிருந்தே ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடமுடியாமல் திணறி மளமளவென ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் வெறும் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அறிமுக ஸ்பின்னர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் அடிக்க, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே அடிக்க, 76 ரன்கள் என்ற எளிய இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பெற்ற 88 ரன்கள் முன்னிலை தான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதற்கு, ஜடேஜா வீசிய நோ பாலும் ஒரு காரணம். மார்னஸ் லபுஷேன் களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனால் அது நோ பாலாக அமைய, லபுஷேன் தப்பித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்க்க காரணமாக அமைந்தார்.
அந்த ஒரு பந்துதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் பேசியதாவது:-
ஜடேஜா வீசிய நோ பால் காரணமாக அதன்பின்னர் லபுஷேனும் கவாஜாவும் இணைந்து 96 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி மொத்தமாகவே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எனவே ஜடேஜா வீசிய அந்த ஒரு நோ பால் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
- ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார் என சென்னை அணியின் கேப்டனான டோனி பாராட்டியுள்ளார்.
இது குறித்து டோனி கூறியதாவது:-
நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. இது எங்களுக்கு மற்றொரு இறுதி போட்டி என சாதரணமாக கூறிவிட முடியாது. கடந்த 2 மாதங்களாக இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். அனைவரின் பங்களிப்பும் இதில் உள்ளது.
சேசிங்கில் குஜராத் அணி வலுவானது என்பதால் தான் முதலில் பந்துவீச விரும்பியதாக டாசின் போது கூறியிருந்தேன். ஜடேஜாவின் பந்துவீச்சு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.
அதே போல் பேட்டிங்கின் போது கடைசி நேரத்தில் மொய்ன் அலியுடன் அவர் கூட்டணி சேர்ந்து விளையாடியதையும் மறந்து விட கூடாது. கடைசி நேரத்தில் எடுத்த ரன்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
- ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு குறித்து டோனி புகழாரம் சூட்டினார்.
சென்னை:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு மிகுந்த மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் டோனி, ஜடேஜாவின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது எனவும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் அவர் அடித்த ரன்களே வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது எனவும் டோனி கூறினார்.
இந்நிலையில் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விருது வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுட்டுள்ளார். அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அப்ஸ்டாக்ஸ்-க்கு தெரியுது. ஆனால் சில ரசிகர்களுக்குதான் தெரியவில்லை என டுவிட் செய்துள்ளார்.
டோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்பாக ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனை ஒரு பேட்டியில் கூட இதை பற்றி ஜடேஜா கூறியிருந்தார். ஜடேஜா மற்றுமின்றி சில வீரர்களும் வியப்புடன் கூறினார்.
ஆனால் இந்த பதிவில் ஜடேஜா கூறியிருப்பது தன்னை அவுட் ஆக சொன்ன சில ரசிகர்களை மறைமுக தாக்குவது போல இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
- ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
- அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் போராடி 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 ரன்களும் டேவோன் கான்வே 40 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார், பதிரனா, தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதிலும் குறிப்பாக 4 ஓவரில் வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனாகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார். அவர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் 175 ரன்களை எடுத்துள்ளார். பந்து வீச்சில் 19 விக்கெட்களை எடுத்து மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்களை எடுத்த முதல் இடதுகை பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஒரு ஸ்பின்னராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 151*
2. அக்சர் படேல் : 112
3. ஆஷிஷ் நெஹ்ரா : 106
4. ட்ரெண்ட் போல்ட் : 105
5. ஜாகிர் கான் : 102
அத்துடன் 2267 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக இருக்கிறார். அந்த பட்டியலில் ப்ராவோ (1560- 183), சுனில் நரேன் (1046 - 163) ஆகியோருக்கு பின் 3-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
- டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று ஜடேஜா கூறியிருந்தார்.
- டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
நடப்பு ஐபிஎல் சீசனில் 53 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 151 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் அனைத்து போட்டியிலும் அவரது பங்கு அதிகமாகவே உள்ளது.
சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீசனில் சென்னை அணியில் இருந்து ஜடேஜா வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதுபோலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே குறித்த புகைப்படம் எல்லாவற்றையும் அவர் நீக்கி இருந்தார். ஒருவழியாக டோனி சமரசம் பேசி சென்னை அணிக்கு மீண்டும் வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா அவ்வப்போது சிஎஸ்கே ரசிகர்களை தனது கருத்துகளால் மறைமுகமாக சாடி வருகிறார்.
ஒரு பேட்டியில் டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்பிறகு சில நாட்களுக்கும் முன்னர் இன்ஸ்டாவில், உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும் என்று பதிவிட்டிருந்தார். இன்று அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை என சர்ச்சைக்கூறிய வகையில் டுவீட் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் ஆர்சிபி ரசிகர்கள் ஜடேஜாவை ஆர்சிபி அணிக்கு விளையாட வருமாறு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் 'நம்ம வீட்டுக்கு வாங்க' என சாலமன் பாப்பையா சொல்வது போல 'ஆர்சிபி-க்கு வருக' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு வலை விரிக்கின்றனர்.
இதில் சில ரசிகர்கள் அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா என்று கூறினார். மற்றோரு ரசிகர் ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு. ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்.
டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள். ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம் என சில டுவிட்டுகள் வலம் வருகின்றன.
- எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
- உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது.
அகமதாபாத்:
ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடைசி பந்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஜடேஜா கூறியதாவது:-
எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. அணிக்காக 5-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த ஊரில் பலர் சி.எஸ்.கே.வுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்.
கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். மோகித்சர்மா மெதுவான பந்துகளை அதிகம் வீசக் கூடியவர். மெதுவான யார்க்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.
இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ அதை தொடருங்கள்.
இவ்வாறு ஜடேஜா கூறினார்.