search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    • சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வீட்டில் வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது டி.ஐ.ஜி. வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிவக்குமாரை சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஏற்கனவே வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து வார்டன்கள் சுரேஷ், சேது, சிறைக்காவலர்கள் ராஜூ, ரஷித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறைக்காவலர் சரஸ்வதி, செல்வி ஆகிய 11 பேர் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    • பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது
    • நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.

    பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.

    இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.

    இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத் தில் ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பாராளுமன்ற வளாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பா.ஜ.க. எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அவர்கள் ராகுல்காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அமித்ஷா மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்க மிட்டனர்.

    இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஊர்வலத்துக்கு பிரியங்கா தலைமையேற்று நடத்தி வந்தார். 2-வது நாளாக பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா-இந்தியா கூட்டணி போட்டி போராட்டம் நடத்தியதால் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    இதற்கிடையே பாராளுமன்ற அலுவல்களை இன்று ஒத்திவைத்து விட்டு அம்பேத்கர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மேல்சபை துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    பாராளுமன்றம் கூட்டத் தொடர் இன்று நிறைவு பெறும் நிலையில் மீண்டும் இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாராளுமன்ற வளாகம் பரபரப்புடன் காணப் பட்டது.

    ×