என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார்.
- சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஜார்ஜ் டவுன்:
பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.
- 2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர்.
- ஆனால் அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இந்திய மக்களும், மகாராஷ்டிரா மக்களும் மீண்டும் பிரதமரின் கொள்கையை அங்கீகரிக்கிறோம் என்ற செய்தியை நாடு முழுதும் அனுப்பி உள்ளனர்.
இதற்காக நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்ற மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியையும் இந்த தேர்தல் அளித்துள்ளது.
சாதி, அரசியல் சாசனம், மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பெறுவோம் என்ற மாயை இந்தியா கூட்டணிக்கு சில காலமாகவே இருந்தது.
2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர். அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.
ஆனால் பிரதமர் மோடி, மஹாயுதி, பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆகிய கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக மகாராஷ்டிரா மக்கள் காட்டி உள்ளனர் என தெரிவித்தார்.
- உத்தர பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
- இதில் காசியாபாத் உள்பட 7 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் காசியாபாத், கெய்ர், புல்பூர், மஜவான், குண்டர்கி, கதேஹரி, ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்நிலையில், உபி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கொள்கைகள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
- காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
- எதிர்மறை அரசியலையும், வாரிசு அரசியலையும் மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:
இன்று எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
நிர்வாக திறனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது. காந்தி குடும்பம் பிரிவினைவாத விஷத்தைப் பரப்புகிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா உறுதிப்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மற்றும் தே.ஜ.கூட்டணி தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உ.பி., உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க.விற்கு வலிமையான ஆதரவை கொடுத்துள்ளன.
அசாம் மக்கள் மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ம.பி.யிலும் வெற்றி கிடைத்துள்ளது. பீகாரில் தே.ஜ.கூ.ட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இது நாடு வளர்ச்சியை மட்டும் விரும்புவதை காட்டுகிறது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது இது மூன்றாவது முறை. இது வரலாறு. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு கிடைத்த சான்றிதழ் ஆகும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அம்மாநிலத்தில் அனைத்து சாதனைகளையும் பா.ஜ.க. முறியடித்துள்ளது என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறை ஆட்சி அமைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது. இதில், தமிழகத்தில் 40 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றி இருந்தது.

ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் ஹாட்ரிக் சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.
- மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
மும்பையில் சுமார் 100-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு மீது, வேகமாக சென்ற கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால பயணிகள் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் எனக்கூறிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றார்.
இந்நிலையில், மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மும்பை துறைமுகம் அருகே பயணிகள் படகு மற்றும் இந்திய கடற்படையின் படகு விபத்துக்கு உள்ளானதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக வெற்றி அடையவும், உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், மும்பையில் படகு விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
- மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் என்றார்.
புதுடெல்லி:
கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் என பதிவிட்டுள்ளார்.