என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
    • வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.

    அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

    அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.

    இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    மேலூர்

    மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவரது மனைவி சுருதி (45). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்லடம் பகுதியில் வசித்து வரும் ரவி (41), அவரது மனைவி துர்கா (35) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.

    இந்த தம்பதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் " பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கணவன்-மனைவியிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுருதி அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்ற பேராசையில் தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து மளிகை கடை நடத்தி வரும் தம்பதியை ரவியும், அவரது மனைவி துர்க்காவும், பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநில மற்றொரு தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த தம்பதி தங்கக் கட்டி என்று கூறி 2 கட்டிகளை சக்திவேல் மற்றும் சுருதியிடம் கொடுத்துவிட்டு ரூ.13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது அவை தங்க கட்டிகள் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பது தெரியவந்தது.


    இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர் உடனடியாக பல்லடம் சென்று தங்க கட்டி என்று கூறி ஏமாற்றிய தம்பதிகளை தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சக்திவேல் மற்றும் சுருதி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க திருப்பூர் தெற்கு இணை கமிஷனர் நந்தினி உத்தரவின் பேரில் வீரபாண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி அவரது மனைவி குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த மேலும் சில பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை சந்தித்து பேசும் அவர்கள் உண்மையான தங்க கட்டிகளை கொடுத்து அதனை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். அந்த தங்க கட்டிகளை பெண்கள் வாங்கி பார்த்து ஆய்வு செய்யும் போது தங்க கட்டிகள் உண்மையானது என தெரியவரவே அவர்கள் தங்க கட்டிகளை வாங்க முன்வந்துள்ளனர்.

    பின்னர் மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர். பெண்கள் அதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படி பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
    • ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.

    சென்னை:

    ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகவே தங்களது கைவரிசையை காட்டு கொண்டிருக்கிறது.

    மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது தொடர்கிறது.

    நாங்கள் சொல்கிறபடி ஆர்.பி ஐ.வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலர் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு சிலர் உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள்.

    இன்னும் சிலரோ மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் போனில் வாக்குவாதம் செய்து யாரை ஏமாற்ற பார்க்கிறாய்? என்று திட்டிவிட்டும் போனை துண்டிக்கிறார்கள்.

    இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதுமே மோசடி கும்பல் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருப்பவர்களிடமும் இது போன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் நாடு முழுவதும் ரூ.1750 கோடி பணத்தை மோசடி பேர்வழிகள் சுருட்டி இருக்கிறார்கள். இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே மாறிப் போயிருக்கிறது.

    வயதானவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்களை குறி வைத்தே மோசடி நபர்கள் பேசுகிறார்கள். அப்போது அவர்களை மூளை கலவை செய்து மிரட்டி தாங்கள் சொல்கிறபடி கேட்க வைத்து விடுகிறார்கள். இதன் மூலமே லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும். அதேபோன்று அப்படியே யாரும் பேசினாலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

    எனவே யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

    அதே நேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதிலும் ஒரு புறம் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மோசடி பேர்வழிகள் அந்த அளவுக்கு அதிகாரிகள் போல ஆங்கிலத்தில் பேசி துணிகர மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு துறையூர் சார் நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

    ரெங்கராஜனின் வாரிசுகளான மனைவி ஜெயக்கொடி மற்றும் மகன் ஜெயதேவன் ஆகிய 2 பேரும், அவரின் இறப்பு குறித்து சார்நிலை கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா? என்பதை அறிய நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து ஓய்வூதிய உயிர் வாழ் சான்று பெற்று சார்நிலை கருவூலத்தில் அளிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வூதியர்கள் அளிக்கும் உயிர்வாழ் சான்றினை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகள் பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.

    இவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியத்தை ஜெயக்கொடி மற்றும் ஜெயதேவன் ஆகிய இருவரும் பல்வேறு தவணைகளில், பல்வேறு காசோலைகள் வாயிலாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.49 லட்சத்து 69 ஆயிரத்து 279 வரையிலான தொகையினை அரசினை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலுக்கு ரெங்கராஜன் வராததால், சந்தேகமடைந்த கருவூல அதிகாரிகள் ரெங்கராஜனின் இருப்பிட முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டே இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கடந்த வருடம் அளித்த ஓய்வூதிய உயிர் வாழ் சான்றினை ஆய்வு செய்ததில், 2015 ஆம் ஆண்டு இறந்த ரெங்கராஜனுக்கு மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா என்பவர் 26.9.2022 அன்று ரெங்கராஜன் உயிருடன் இருப்பதாக கூறி, உயிர் வாழ் உறுதி சான்று அளித்ததை அறிந்து அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் மோசடி நடைபெற்ற விதம், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே இறந்தவரின் இறப்பை மறைத்து மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்து, தற்சமயம் வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×