search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trial"

    • ஒரே நாளில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கருப்பாயி ஊரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார்.வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பஞ்சு மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னக் கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருப்ப ரங்குன்றம் ராஜீவ்காந்தி 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அருண்பாண்டி (24).இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கணேசன் திருப்ப ரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபர் அருண் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு-பள்ளிபாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியை சேர்ந்த சிவசக்தி (வயது 22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

    இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.
    • தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி ரவுடி திருவேங்கடம், புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை, ஆகியோரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதுச்சேரியிலும் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உத்தரவின் பேரில் புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.

    இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.


    மேலும் தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் யாரும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனை செய்த பின்னரே புதுச்சேரிக்கு அனுதிக்கின்றனர்.

    திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளத்திலும், கடலூர் சாலையில் முள்ளோடையிலும், விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டிலும் மற்றும் தமிழக எல்லையில் இருந்து வரும் உள்புற சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
    • சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

    இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×