என் மலர்
நீங்கள் தேடியது "அதிபர் ஜோ பைடன்"
- போயிங் விமானங்களை ஏர் இந்தியா வாங்கும் ஒப்பந்தத்திற்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார்.
- இரு தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வாஷிங்டன்:
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்களை இந்தியா வாங்குகின்றது. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டி, வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன், ஏர் இந்தியா-போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தக் கொள்முதல் 44 மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வேலைகளை உருவாக்கும் என தெரிவித்தார்.
இரு தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நமது பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், குவாட் போன்ற குழுக்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் இருவரும் உறுதிபூண்டனர்.
- ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
- அமெரிக்க அதிபர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வார்சா:
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் சென்ற அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷியாவைக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முயலவில்லை. புதின் கூறியதுபோல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷிய குடிமக்களை எதிரிகளாக பார்க்கவில்லை.
உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது. குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து, ரஷிய டாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன, உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஒரு வருடம் கழித்து தலைநகர் கீவ் வலுவாக நிற்கிறது, அது பெருமையுடன் நிற்கிறது, அது உயரமாக நிற்கிறது மற்றும் மிக முக்கியமாக கீவ் சுதந்திரமாக நிற்கிறது என தெரிவித்தார்.
- உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
- இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவியின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 586 கோடியே 71 லட்ச ரூபாய் ஆகும்.
உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
- அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக உள்ளார்.
- அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது.
நைரோபி:
ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக கூறினார்.
முன்னதாக, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் என்று ஜோ பைடன் நீண்ட காலமாக கூறியிருந்தாலும், அவர் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக்கவில்லை.
மேலும் அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய பதவிக் காலத்தின் முடிவில் பைடனுக்கு 86 வயது நிரம்பி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
- அப்போது வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம், வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன..... என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா... இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.
- உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
- இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
ரஷியா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்ததன்பேரில் உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர்க்கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது. உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நாங்கள் துணைநிற்போம் என தெரிவித்தார்.
- வரும் 2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
- இதில் ஜோ பைடன் 2-வது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, 46-வது அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனிடையே அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் , கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுவர்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவு விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வரலாற்றில் மிகவும் வயதான அமெரிக்க அதிபர் ஆவார்.
இதனிடையே குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். எனவே டொனால்டு டிரம்ப்பை வீழ்த்த ஜோ பைடனை மீண்டும் அதிபர் வேட்பாளராக நிறுத்தவற்கான முயற்சியில் ஜனநாயக கட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார்.
- கொட்டும் மழையில் குடைபிடித்தபடி நின்று அவருக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
டப்ளின்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அயர்லாந்து வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டினுடன் அங்குள்ள கார்லிங்போர்ட் கோட்டைக்கு அதிபர் ஜோ பைடன் சென்றார். அப்போது அங்கு கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி நின்று ஜோ பைடனுக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
- ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
- அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
வாஷிங்டன்:
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, மோடி பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். அவர் அவர் குவாட் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது.
- அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்றார்.
ஹிரோஷிமா:
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் கூறுகையில், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் மிகவும் பிரபலமாகி விட்டீர்கள். குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.
- விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
- அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.
- ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
- ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.
இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.