என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
    • சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.

    மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.

    தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை அருகே 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 16 வயது சிறுமி. இவர் அழகு கலை பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. அப்போது சிறுமியின் பெற்றோரை செல்போனில் அழைத்த மர்ம நபர் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    பெற்றோர்கள் அங்கு சென்று மருத்துவர்களிடம் விசாரித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருந்ததும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு கரு சிதைவு ஏற்பட்டு விட்ட தாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர் மன்னாடி மங்கலத்தை சேர்ந்த ஒரு வரை காதலித்து வந்தததாக வும், சோழவந்தான் மாரி யம்மன் கோவில் முன்பு காரில் வைத்து தாலி கட்டிய தாகவும், அதன் பின்னர் இருவரும் நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சமய நல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்னாடி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்தி ரன் மகன் ஆனந்தகுமார் என்பவரை தேடி வருகின்ற னர்.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    ×