என் மலர்
நீங்கள் தேடியது "கொள்ளை"
- பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளை.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவாஜி நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகதீஷ் (வயது 30 ). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கும்பகோணம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை அருகே வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது.
- ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மதுரை
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கண வன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட் டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 3½ பவுன் தங்க நகை கள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
யாரோ மர்ம நபர் கள் ராதாகிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து உஷாராணி சிலைமான் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
- கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.
அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.
மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.
இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.
மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.
காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.