என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    • சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • 8 மாதங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் களத்தூரை சேர்ந்த விவசாயிகள் நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக பட்டுக்கோட்டை சித்துக்காடு கிராம கமிட்டி தலைவர் மற்றும் களத்தூர் கிராம பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் களத்தூர் ஊராட்சி உட்பட்ட 237 களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய்த் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இது நிலத்தை மீண்டும் எங்கள் கிராமத்தோடு இணைக்க கோரி இது சம்பந்தமாக கடந்த மே 2ம் தேதி அஞ்சல் வழியாக கிராம மக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். மேலும் இது சம்பந்தமாக 8 மாத காலங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இந் நிலையில் மாவட்ட கலெக்டர் அந்த இடங்களை மறு ஆய்வு செய்தும் ஆவணங்களை சரிபார்த்தும் தடையை நீக்கி ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று காலை நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான களத்தூர் ஊராட்சி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும்.

    குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:-

    இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை.

    அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

    • ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அய்யப்பன் எம்.எல்.ஏ. புகார் கூறினார்.
    • தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி யில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

    இங்கு போதிய இடவசதி இல்லாததால் நபார்டு வங்கி மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட் டது. இந்த கட்டிடத்தில் உள்ள வகுப்பறை கட்டிடத்தின் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் மாண வர்கள் பயின்று வருகின்ற னர்.

    மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்ப தற்காக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவா ளருமான அய்யப் பனிடம் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தி ருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுப்ப தற்காக அய்யப் பன் எம்.எல்.ஏ. புதிதாக கட்டப் பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆசிரி யர்களிடம் மாணவர்க ளின் பாது காப்பற்ற சூழல் உள்ளதால் மாணவர்களை வகுப்பறைக் குள் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    உசிலம்பட்டி சட்ட மன்றத்திற்கு உட்பட்ட 10-க் கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் கட்டுவ தற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டு மான பொருட்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் முதல மைச்சருக்கு தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டு மென கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் கட்டி டங்கள் தரமான முறை யில் கட்டப் பட்டதாக பதில் கடிதம் அனுப்பி யிருந்தார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் வேண்டுமென பள்ளி சார்பில் எனக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக ஆய்வு செய்ய வந்தபோது அனைத்து சுவர்களும் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
    • இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சயனைடு கலந்த மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த சம்பவம் குறித்து

    தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த கருணாகரன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விசாரணை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் தற்போது கிழக்கு போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டராக மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.

    கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×