என் மலர்
நீங்கள் தேடியது "முகஸ்டாலின்"
- தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- வரும் 4ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
- பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக்குவது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளி வந்தவுடன், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதலாவதாக அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.
திமுக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, இது தொடர்பாக முதலமைச்சர் 16.10.2022 அன்று கடிதம் எழுதி இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களில் திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் வரும் 4ந் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
- 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சென்னையில் 2 ஆம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது.
சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர்.

நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.
மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரி வெளியுறவு மந்திரிக்கு, முதலமைச்சர் கடிதம்.
- தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்,கைது சம்பவங்கள் தொடர்கின்றன.
தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி இந்த சரணாலயம் அமைகிறது.
- மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.
ஓசூர் அருகே 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி இந்த சரணாலயம் அமைகிறது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக அமைய உள்ள காவிரி தெற்கு சரணாலயம் தமிழகத்தின் 17வது வன விலங்கு சரணாலயமாகும்.
இது குறித்து முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்கின்றனர்.
காந்தி கிராமம்:
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு பிரதமர் மதுரை வருகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வருவதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது.
- அடாத மழையிலும் விடாது பணியாற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நன்றி.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடித்தது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நடைபெறும் பணிகள் குறித்து அப்போது விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே, சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே.
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான் வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
- சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி அக்சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- வடசென்னைப் பகுதிகளில் நேற்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.
சீர்காழி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.
சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்தது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார்.
- இந்தியாவிலேயே தலை சிறந்த சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:
234 தொகுதிகளிலும் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஒரு அணிக்கு செயலாளர் உண்டு என்றால், அது உதயநிதி ஸ்டாலின்தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது. இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து தன்னை அவர், முன்னிலை படுத்தி வருகிறார். வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார், அதற்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளதாவது: ஒன்றரை ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டுகளில் தலைவர் தளபதி, உங்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்ய இருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பவர் யார் என்றால், இந்தியாவிலேயே தலை சிறந்த சட்ட உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
- அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் டுவிட்டர் பதிவு
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவீட்டர் பதிவில், கூறியிருப்பதாவது
ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார், புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை.
- கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கோரிக்கை.
கால்நடைகளுக்கான தடுப்பூசி கோரி, மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்) கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப் பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.