என் மலர்
நீங்கள் தேடியது "வழிபாடு"
- கால பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
- 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.
உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.
பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.
முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.
வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.
மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.
இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
- இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.
ஆடி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.
கடந்த 18-ந் தேதி ஆடி முதல் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தன.
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வளையல் பாவாடை அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
பல பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இன்று மாலை கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனல் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.
இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வல்லம் பாபநாசம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றன.