என் மலர்
நீங்கள் தேடியது "பரிசு"
- தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
- சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று 45-வது வார்டுக்கு உட்பட்ட கூட்டுறவு காலனி, உமா நகர், தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலங்கல் இட்டனர்.
இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் வீடு வீடாக சென்று கோலங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.
இதையடுத்து சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு வழங்கும் விழா கூட்டுறவு காலனி கற்பக விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார்.
மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
- விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
இந்திய கட்டுனர் சங்க நாகப்பட்டினம் மையம் சார்பாக வெங்கிடங்கால் செம்பை நதி கிராமத்தில் கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கட்டுணர் சங்க நாகப்பட்டினம் மைய தலைவர் அரிமா ச. மீரா உசேன் தலைமை தாங்கினார்.
கட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் முனைவர் நவாப்ஜான், முனைவர் காளிதாஸ், சர்புதீன் மரைக்கார் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் கே.எஸ்குமாரவேல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாகூர் ஏ.ஆர்.நௌஷாத் கலந்து கொண்டனர் விழாவில் ஆடிட்டர் குமாரவேலு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- போக்குவரத்து கழகத்தில் 168 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
- 451 பேரை ஊக்கப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களில் பரிசு வழங்கப்படுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய மிகப்பெரிய இயக்கப் பகுதியாக கும்பகோணம் கோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டத்தில் 3184 பஸ்கள் மூலமாக தினமும் 15 லட்சம் கி.மீ. இயக்கப்பட்டு 23 லட்சம் பயணிகளுக்கு சேவை புரிகிறது.
இந்த போக்குவரத்து கழகத்தில் 168 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும், அதிக வருவாய் ஈடுட்டிய கண்டக்டர்கள், அதிக டீசல் செயல்திறன் ஈட்டிய டிரைவர்கள், சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், டிரைவர் போதகர்கள், பொறியாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள் உட்பட 451 பேரை ஊக்கப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களில் பரிசு வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பு பணியாளர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக டீசல் செயல்திறன் 5.72 ( கேஎம்பிஎல்) என்ற அளவிலும், டயர் உழைப்பு திறனில் 3.50 லட்சம் கி.மீ. என்ற அளவிலும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் கும்பகோணம் கோட்டம் முதல் இடத்தில் உள்ளது.
கும்பகோணம் கோட்டம் இன்றைய அளவில் ஒரு கி.மீ.க்கு ஈட்டப்படும் பஸ் இயக்க வருவாய் ரூ.25.70 என்ற அளவில் உள்ளது. விபத்திலா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய அனைத்து டிரைவர்களும், கண்டக்டர்களும் கவனத்துடன், பாதுகாப்பு டன் பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ஜெபராஜ் நவமணி, முகமது நாசர், கோவிந்தராஜன், துணை மேலாளர்கள் முரளி, சிங்காரவேலு, ராஜா, ஸ்ரீதர், கணேசன், உதவி மேலாளர்கள் ராஜேஷ், ரவிக்குமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
- எல்கை பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில், மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு–மொத்த பரிசாக ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.
எல்கைப் பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.
பந்தயங்களை செல்வவிநாயகபுரம், ஆண்டவன்கோவில், ஆத்தாளூர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பேராவூரணி போலீசார் செய்திருந்தனர்.