என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டம்"
- நாளை முற்பகல் 11 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது .
எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஓரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திற னாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
- நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித்தரவேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் சிலேகா முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் மணக்குடி ஊராட்சிக்கு சாலை வசதிகளை செய்து தருமாறும், அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக் கோரியும், நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமாரராஜா, மகளிர் சுய குழு அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.
- நாச்சிகுளம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- பள்ளிக்குத் தேவையானதை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து தரப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் கந்தசாமி தலைமையிலும், தலைமை ஆசிரியர்தமிழ்செல்வன், பிடிஏ தலைவர் தாஹிர், மேலாண்மை குழு தலைவர்செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்க செயலாளர்தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் டாக்டர் கந்தசாமி, துணைத்தலைவர்கள் தனுஷ். பாண்டியன், ஜாகிர் உசேன், செயலாளர்தாஜுதீன், துணை செயலாளர்க ள்குருநாதன், சத்யா, பொருளாளர்ஜான் முகமது, ஆலோசகர்களாக ஜெயசீலன், சோமசுந்தரம், தங்கராஜன், சேக்அலாவுதீன், சாகுல் ஹமீது, இர்பான்அலி, செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்ச்செல்வன், கணேசன், சுந்தரபாண்டியன், முருகானந்தம், செந்தில்குமாரி, அமீன், அபிராமி,காவியா ,அப்துல் ரகுமான், பாசிலன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், அலாவுதீன் ,ஆனந்த், ராஜலட்சுமி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்குத் மிக அவசியமான தேவைகளை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து கொடுப்பது என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
- தஞ்சையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
- மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
இதற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.
இதில் தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மா காலனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜிசாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.