என் மலர்
மின் தடை அறிவிப்பு செய்திகள் | Power Outage or Shutdown News in Tamil
- வீரபாண்டி துணை மின் நிலையம் உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீரபாண்டி துணை மின் நிலையம் கரைப்புதூர் மின் பாதையில் நாளை 28-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நொச்சிப்பாளையம் பிரிவு, முல்லை நகர், என்.எஸ்.கே. நகர், டி.கே.டி. மில் ேராடு, டி.வி., நகர், பாரியூர் அம்மன்நகர், ராயல் பார்க், ஆர்.எம்.நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை.
- அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 29-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம், உப்பிலிபாளையம், அண்ணாநகா், லட்சுமி நகா், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன்காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகா், அய்யாவு நகா், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து காா்டன், சரஸ்வதி நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.
- திருப்பூர் ஆண்டிப்பாளையம் மற்றும் சி.ஜி.புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மின்தடை.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி.ஜி.புதூர் துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் நகர், கே.என்.எஸ்.நகர், அண்ணா நகர், ஜீவாநகர், அம்மன் நகர், செல்லம்நகர், குறிஞ்சிநகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என்.சி.சி. வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி, வீனஸ்கார்டன் பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- அவிநாசி, வீரபாண்டி, பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
அவிநாசி :
பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5-ந்தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : பல்லடம் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
பனப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):பனப்பாளையம், சேரன் நகா், ராயா்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.
உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா் மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிப்பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.
அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்.
- கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி
- மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மீனாட்சிபுரம், ஈத்தாமொழி பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் நாளை (5-ந்தேதி) அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான சற்குணவீதி, மேலராமன்புதூர், ஐ.எஸ்.ஆர்.ஓ. வளாகம், சிவன் கோவில் தெரு மற்றும் வத்தக்காவிளை, கீரிவிளை, பிலாவிளை, சுண்டபற்றிவிளை உள்ளிட்ட இடங்களில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமலைநகர், பெஅய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதியில் மின்தடை ஏற்படும்.
- வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.
திருப்பூர்:
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்துப்பாளையம், 15வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட் , போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சோர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திராபகுதி,
டி.டி.பி.மில் ஒரு பகுதி, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெஅய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதியில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் வருகிற 8-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
- எல்லீஸ்நகர், சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ் நகர் மெயின்ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ. முதல் எச். பிளாக்குகள்).
போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள்.
சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியரம் போலீஸ் நிலையம் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம்.
ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்காதோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் உள்ள கழிவுநீரேற்று நிலைய உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன்காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம்,பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால்துறை பயிற்சி நிலையம், காவலர் குடியிருப்பு, சின்ன உடப்பு, விமான நிலைய குடியிருப்பு, குரங்குத்தோப்பு, ஆண்டவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, பரவை மெயின்ரோடு, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
உடுமலை :
உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் இடங்கள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.
- இத்தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
- முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர்:
பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 9-ந் தேதி இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்கு பதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 9-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டி பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
- மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள காடுபட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை புதூர் மின்பிரிவு மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தின் தொழிற்பேட்டை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மூன்றுமாவடியின் ஒரு பகுதி, சர்ச் ரோடு, மாட்டு ஆஸ்பத்திரி, லோட்டஸ்ட் அபார்ட்மெண்ட், ஒய்.டபிள் யூ.சி. ஆஸ்டல், சம்பகுளம் 1 முதல் 5 தெருக்கள், சிவானந்தா தெரு, விவேகானந்தா தெரு, மீனாட்சி அபார்்ட்மெண்ட், கமிசனர் அலுவலகம், இ.பி. காலனி, 120 அடி ரோடு, பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை வண்டியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர்தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது.
- இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது.
கடலூர்:
வடலூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது, வடலூர் பகுதியில் மிக தாமதமான மழையால், சம்பா நெற்பயிர்கள் சாகுபடி மிக தாமதமாகவே நடந்து வருவதுடன், இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது, தொடர்ந்து பெய்த கன மழையால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
- தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
- ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 46 கிராம ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. கண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் உள்ள சாலை மிக முக்கியமான சாலை. இச்சாலை அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் சாலை. இதேபோல கண்டமங்கலம் சுடுகாட்டு பாதையும் இது தான்.இப்படி மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல கண்டமங்கலம் ஒன்றியத்தில் மழைநீர் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்பு, வாழை, கத்தரிக்காய் செடிகள், பூச்செடிகள், சவுக்கு பயிர்கள் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகும் நிலை உள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் அதிக அளவு மழை நீர் சூழ்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு அழுகிவிடும் என விவசா யிகள் புலம்பி வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். பல இடங்களில் மின் மோட்டா ர்கள் மூலம் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வெளியேற்ற முடியாமலும் உண்ண உணவின்றியும் பொது மக்கள் பெரிதும் கஷ்டப்படு கின்றனர். பல இடங்க ளில் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் பொது மக்களை கண்ட மங்க லம் ஒன்றிய குழு தலை வர் ஆர்.எஸ்.வாசன், துணை த்தலைவர் நஜீரா பேகம்தமின், கண்டமங்க லம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அறிவுறு த்தலின் பேரில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவ ர்கள் அந்தந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக கொட்டும் மழை யையும் பொருட்படுத்தா மல் சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள்.