என் மலர்
நீங்கள் தேடியது "tag 95993"
- ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம்.
- ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல்.
சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியின் 'திரிசூலங்களில்' ஒன்றான அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு அழைத்து நேற்று 11 மணிநேரம் விசாரணை நடத்தியது. இன்றும் நடத்துவதை எதிர்த்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஜனநாயக வழியில் அவர்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
டெல்லித் தலைநகரில் நடந்த அறப்போராட்டத்தில், தேவையற்ற தள்ளுமுள்ளு நெருக்கடியில் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் நண்பர் ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல் ஆகும்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை ஒன்றிய உள்துறையின் அங்கமாக உள்ள டெல்லி காவல்துறையினரிடம் கேட்டு, நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய விழைகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது.
- என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர்.
புதுச்சேரி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதன்படி புதுவையிலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன், நிர்வாகிகள் ரகுமான், கருணாநிதி, தனுசு, இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது. என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர். புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த காங்கிரசார் பலர் உள்ளனர். அவர்களின் வாரிசுகள் வேறு கட்சிக்கு சென்றிருக்கலாம். அவர்களை யெல்லாம் அழைத்து பேச வேண்டும்.
புதுவையில் தனித்தனியே கமிட்டி போட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அதற்கு தேவையான வேட்பாளர்கள் உள்ளனர். தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது.
புதுவையில் காங்கிரஸ் யாரையும் சார்ந்திராமல் தனித்து போட்டியிட வேண்டும்.
கடந்த முறை தேர்தலில் என்னை முதல்-அமைச்சர் என கூறினீர்கள், பின்னர் நீங்கள் முதல்-அமைச்சர் ஆனீர்கள். கட்சித்தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கு எல்லாம் வயதாகி விட்டது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கவர்னர், வெளிநாட்டு தூதர், துணை ஜனாதிபதி என வேறு பதவிகளை வாங்கி சென்று விடுங்கள்.
புதுவையில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். நானும் அந்த வயதுக்கு வந்தால் பதவியில் இருக்கமாட்டேன் என பேசினார்.
அப்போது நாராயண சாமி குறுக்கிட்டு, ஏம்பலம் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம், கந்தசாமி கூட முதல்-அமைச்சர் ஆகலாம் என்றுதான் கூறினேன். நீங்கள்தான் முதல்-அமைச்சர் என கூறவில்லை. கட்சித்தலைமை யாரை கைகாட்டுகிறதோ? அவர்கள்தான் பதவிக்கு வருவார்கள் என்றார்.
இதையே சொல்லி எத்தனை காலம் ஏமாற்று வீர்கள்? என கந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக கந்தசாமி ஆதரவாளர்கள் பேசினர். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி, போராட்டத்தை அலுவலகத்துக்குள் நடத்துவதில் என்ன பயன்? மக்களுக்கு தெரியப்படுத்துவோம், ரெயில் மறியல் செய்யலாம், சாலை மறியல் செய்யலாம் என அழைத்தார். அதற்கு எதிர்தரப்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கட்சி அலுவலகத்தில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என அறிவு றுத்தியுள்ளனர் என தெரி வித்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் இருந்து வெளியேறி அலுவலகத்துக்கு எதிரில் சாலையில் நற்காலியை போட்டு அமர்ந்து தர்ணா செய்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் அமர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தர்ணா நடந்தது.
- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
- காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.
புதுடெல்லி:
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முதலில் இதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் அல்லாத ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். 22 கட்சிகளுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். முதலில் அவரது முயற்சிக்கு காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் மம்தா மேற்கொண்ட திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் இன்று பிற்பகல் டெல்லியில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க முதலில் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டார். அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகின்றன.
இதற்கிடையே மம்தா பானர்ஜி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ், இடது சாரிகட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர் யோசித்து பதில் சொல்வதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.
ஆனால் பரூக் அப்துல்லாவும் பொது வேட்பாளராக களம் இறங்க தயங்குகிறார். இதுபற்றி எல்லாம் எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரில் 2 பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2-ம் நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் சுபாஸ்தேசாய், ராஷ்டீரிய லோக்தளம் சார்பில் ஜெயம்சவுத்ரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா ஆகியோர் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த்சோரனும் கலந்து கொள்ள உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை.
ஆனால் மம்தா ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. அதுபோல ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், பொது வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு இறுதி வடிவம் கிடைக்காத நிலை இப்போதே உருவாகி உள்ளது.
பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆதரித்தால் கூட போதும், பா.ஜ.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர்.
- மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர்களும், தொண்டர்களும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து இருந்தனர். ஆனால் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
அவர்கள் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் சத்தீஷ்கர் முதல்- மந்திரி பூமேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர். மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
- டெல்லியில் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
- ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டு
நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இன்றும் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது டெல்லி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடத்திவரும் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.

'தலைவர் ராகுல் காந்தியை கடந்த இரண்டு நாட்களாக பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்காக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கொடூரமாக தாக்கி கைது செய்து வருகின்றனர்' என்றும் விஜய் வசந்த் கூறி உள்ளார்.
- எம்.பி.க்களை டெல்லி போலீசார் தாக்குவதாக சபாநாயகரை சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
- காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி போலீசார் தாக்குவதாக சபாநாயகரை சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி காவல்துறை நடத்துவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார் அளிக்க உள்ளனர்.
- பொய் வழக்கு போட்டு ராகுல் காந்தியை விசாரணை செய்வதாக கூறி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
- புதுவையில் நடந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
பொய் வழக்கு போட்டு ராகுல் காந்தியை விசாரணை செய்வதாக கூறி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுபோல் புதுவை காங்கிரஸ் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி இன்று கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெறும் என புதுவை காங்கிரசார் அறிவித்தனர்.
இதன்படி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல கங்காதரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, வீரமுத்து, ரகுமான், வினோத் உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் படேல் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் வழியாக ஆம்பூர் சாலையை வந்தடைந்தது. அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து காங்கிரசாரை தடுத்தனர். பேரிக்கார்டு மேல் ஏறி நின்று காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.
ராகுல்-சோனியா மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டிக்கிறோம் என்றும் மத்திய பா.ஜனதா அரசு மற்றும் பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் போலீசார் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.
- காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன்.
புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது.
காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன். இப்போது இந்தப் பொறுப்பில் இருந்து விடுபடுவதால் நிம்மதியாக இருக்கிறேன்.
காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராமுவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 2-வது தலித் சமூக தலைவர் கார்கே ஆவார்.
- காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.
அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று புதிய காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு 7,897 வாக்குகள் கிடைத்தது. சசிதரூர் 1,072 ஓட்டுகள் பெற்றார்.
மல்லிகார்ஜூன கார்கே இன்று முறைப்படி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி அவர் காலையில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்கும் விழா நடந்தது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மல்லிகார்ஜூன கார்கேவிடம் மத்திய தேர்தல் குழு தலைவர் மது சூதனன் மிஸ்திரி வழங்கி னார். கட்சியின் தலைவர் பதவியை விட்டு சென்ற சோனியா காந்தி அவரிடம் முறைப்படி தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.
மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்கேவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற நேரு-காந்தி குடும்பத்தை சாராத நபர் கார்கே ஆவார். மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராமுவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 2-வது தலித் சமூக தலைவர் கார்கே ஆவார்.
கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு- காந்தி குடும்பத்தை சாராத நபர் சீதாராம் கேசரி ஆவார். இவர் கடந்த 1998-ல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சோனியா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்றார். 2017 முதல் 2019 வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. உள்கட்சி பூசல், குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் உள்ளிட்ட சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன. கட்சியில் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது.
+2
- குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
- சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யில் 55 வார்டுகள் உள்ளன.இதில் பாளை மண்டலத்துக்குட்பட்ட 32-வது வார்டில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.
ஆனாலும் இதுவரை சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். அந்த வார்டு பகுதியில் சுமார் 5,000 வீடுகள் இருக்கும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி பெரும்பாலான வீடுகளில் உறவினர்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வார்டை சேர்ந்த ஏராளமான பெண்கள், கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாளை பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதனை அறிந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தன்ராஜ், ராமசாமி உள்ளிட் டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசாரும் வந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பஸ் நிலையம் அருகே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் அடைப்புகள் சரி செய்யும் பணி நடைபெற்றது. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு வதற்காக மாநகராட்சி லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இந்து மதத்தை குறை கூறுவது, நேருவின் பழக்கம் என்று சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது.
- நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று காந்தி சொன்னார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.
காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி. நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் இந்து மதத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை. நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், அதை அடுத்தவரிடம் திணிக்க மாட்டேன் என்று கூறினார். இதுதான் காங்கிரசின் தத்துவம். இதுதான் மதச்சார்பின்மை.
பிரிவினைவாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள், இன உணர்வுகளை கிளப்புபவர்கள் காலப் போக்கில் தோல்வியடைவார்கள். இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம்.
அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், மதசார்பின்மையை காக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணுபிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இமாச்சல் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் பிரச்சார குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
- சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
புதுடெல்லி:
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று ஒப்புதல் அளித்தது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 43 பேர் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.