search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன்"

    திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் சூரியகதிர் சிவன் மீது படும் அற்புத நிகழ்வு நடந்தது.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் நீண்ட ஆண்டுக ளுக்கு பிறகு வைகாசி ஞாயிறை முன்னிட்டு ஐந்து நிமிடம் சாமி மீது சூரியகதிர் படும் அற்புத நிகழ்வு நடந்தது. இதனை அறிந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சூரிய பூஜை செய்து வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, கோயில் கணக்கர் சங்கரமூர்த்தி, கிராமமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கும் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

    கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்குவது சிறப்பானதாகும். இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.
    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.
    2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.
    3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
    4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
    5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
    6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
    7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
    8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
    9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
    10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
    11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
    12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு வைகாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் வேண்டி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக ஏகாம்பரநாதருக்கு தொடர்ச்சியாக நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    அதனுடன் சிறப்பு அலங்காரத்துடன், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.
    சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார். ஒரு சமயம் பிரயைம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர் அதற்கு ஈசன்.

    தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன். அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.

    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.

    லிங்க மூர்த்தென சதாகாலம் விநாமந்த்ராதி சத்க்ரியாம் ப்ரஸன்னோ நிவசாம் ஏவ பக்தி பாஜாம் விமுக்தயே, என்று விவரிக்கிறது.

    வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், ஸ்படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும். எப்பொருளில் லிங்கம் செய்தாலும் புகஜக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.

    பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.
    சின்ன பூஜையால் மன திருப்பதி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேதநூல்கள் இவரை ஆகதோஷி என்று போற்றுகின்றன.

    சிவராத்திரி பூஜை விதி... மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.

    சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.
    பூஜைம் சம்போ- ஸ்ரீபதே சக்விரதானிச என்பது வாக்கு.

    பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. ஆதிசங்கர பகவத் பாதர், சுத்தநீர் அபிஷேகம்-பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம்-நூறு பாவங்களையும், தயிர்-ஆயிரம் பாவங்களையும், நெல்-பத்தாயிரம் பாவங்களையும், இளநீர்-ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம்-சகல பாவங்களையும் அகற்றும் என்றார்.

    தைலம்-பக்தியையும், பழங்கள்-மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம்-ஆயுளையும், பால்-நல்ல குணத்தையும், தயிர்-உடல் நலத்தையும், தேன்-இசைத் திறனையும், இளநீர்-குழந்தைப் பேறையும், விபூதி-நல்லறிவையும், சந்தனம்-சுகவாழ்வையும், பஞ்சகவ்யம்-கல்வித் திறனையும், பன்னீர்-புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

    இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப்படங்களைக் காணச் செல்கின்றனர். அந்த நாளில் முடிந்த அளவு தவிர்த்து மறுதினம் செல்லலாமே! சிவராத்திரி விரத நாளில் ஐம்புலன்களையும் அடக்கிச் சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். வாழ்நாள் இனிதாகும். ஓம் நமசிவாய.
    இசையும் பொருளுமாய் விளங்கிடும் தெய்வம்
    கண்ணின் மணியாய்க் காத்திடும் தெய்வம்
    கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்
    உரைகள் கடந்த உயர்ந்திடும் தெய்வம்
    அதுநான் லிங்கத்துள் உரையும் நமசிவாயம்.
    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.
    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

    எனவே மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
    ×