என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 96711
நீங்கள் தேடியது "ஆப்பிள்"
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது.
இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
“ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB விலை ரூ. 49 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடலுக்கு வங்கி சலுகையாக ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ஐபோன் 12 மினி மாடலுக்கு வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் புதிய ஐபோன் 12 மினி 64GB மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மினி 256GB மாடல் ரூ. 64 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.
முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறை. ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.
சப்ளை தடைகளைத் தவிர்ப்பதற்காக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களினை கூடுதலாக உருவாக்குமாறு ஆப்பிள் அதன் சப்ளையர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷாங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமான வணிகம் பாதிக்கின்றனவாம். அதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது. அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வியட்நாம் சீனாவை விட ஆப்பிளின் சிறந்த தேர்வாக இருப்பதற்கு முதன்மைக் காரணம், ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு மற்றும் பிற வளங்களைப் பெறுவது எளிது என்பது தான்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X