search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க."

    • இந்தியா கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும்.
    • எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவோம்.

    சென்னை:

    தி.மு.க.-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது:-

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூத்த அரசியல் தலைவர். மிக நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்தவர். தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒன்று இந்தியா கூட்டணி எந்த கட்டத்திலும் மாறுபட்டு போக இடம் அளிக்க கூடாது. அதற்கு காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்.

    இந்தியா கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும். இரு கட்சிகளிடையேயும் மனமாச்சரியங்கள், சங்கடங்கள் இருந்தால் அது களையப்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவோம். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.
    • தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500 சதவீத உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மதுரை கே.கே.நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
    மதுரை

    மதுரை கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளர் அக்ரிகணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி,முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னையில் கடந்த 28-ந் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்ட முடிவுகளின் படியும்,  மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளரின் அறிக்கையின் படியும், மதுரை கே.கே.நகர் பகுதி கழகத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும்  கருணாநிதி  பிறந்தநாளை வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடுவது பற்றியும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முடிவெடுக்கவும், இன்று (1-ந் தேதி) மாலை 6 மணி அளவில் அண்ணாநகர் கோல்சா காம்ப்ளக்ஸ் எதிர்புறம் உள்ள பன் புரோட்டா கடை ரெஸ்டாரன்ட் அரங்கில் மதுரை வடக்கு மாவட்டம் கே.கே.நகர் பகுதி கழகக் கூட்டம்  பகுதி அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும், பகுதி செயலாளர் அக்ரி கே.பி.டி.கணேசன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

    இதில் கே.கே. நகர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ,மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×