என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamil magan Hussain"
- எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன
- ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அதை கொண்டு வந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன். உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவர் அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்.
நான் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன் அங்கே போய் இருங்கள் என்றார். எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.
எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று பல அறைகூவல்கள் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல.
மக்களுக்காக செயல்படுகிற பாடுபட ஏற்றமிகு தொண்டர்கள் உள்ள இயக்கம் அ.தி.மு.க. அதனை எண்ணிப் பார்த்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளித்தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியது தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.
- இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.
தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரி சுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
- நெல்லையில் இருந்து தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.
நெல்லை:
சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுதாபரமசிவம், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், காந்திவெங்கடாசலம், திருத்து சின்னத்துைர, சக்திகுமார், நிர்வாகிகள் சீனிமுகமது சேட், அங்கப்பன், முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்