என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax Collection"

    • விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
    • ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சுரேந்தர் ஷா பொறுப்பேற்றார். அதுமுதல் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கிகளை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சுரேந்தர் ஷா விழுப்புரம் நகராட்சியில் இருந்து விடைபெற்று, திருவள்ளுவர் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • 2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
    • 2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023-மார்ச் 2024) மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 20.14 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் வசூலித்ததை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

    2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகள் வெளியிட்டுள்ள அறிக்கயைில், "மார்ச் 2024க்கான மொத்த நல்ல மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், 11.5 சதவீத வளர்ச்சியுடன், 1.78 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைக் கண்டுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் இந்த எழுச்சி ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் 2024க்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர ரீஃபண்ட் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

    இதில், மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து வரி வசூலாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ராஜபாளையத்தில் நடைமுறைக்கு வராத தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
    • இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயவாளர் மாரியப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

    தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சதவீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறுவதற்கு 11.7.2016-ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

    அந்த தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்டணத்தை மாற்றியமை த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 சதுரஅடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150/- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அந்த தீர்மான த்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் ராஜபாளை யம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்திருப்பதை யொட்டி மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை 1.4.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.

    இது குறித்து பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் 21.7.2022-ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.100 எனவும், அதற்குமேல் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.150 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றியது.

    தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றிய மைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு முன் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே தாங்கள் தலையிட்டு தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகராட்சி திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.
    • கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வரி நிலுவை மற்றும் திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.

    இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சொத்து வரியின் மூலமாக மட்டும் வருடத்திற்கு ரூ.138.90 கோடி எட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வரி நிலுவைத் தொகை ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்து விட்டதால் மாநகராட்சி பராமரிப்பு மற்றும் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

    திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

    அதன் பிறகு ஜூலை 29-ந்தேதி முதல் இந்த மாதம் 5-ந்தேதி வரை சொத்து வரி, மாநகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் மற்றும் சேவை கட்டணங்கள் மூலம் ரூ.8 கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திருத்தப்பட்ட வரி உயர்வும் ஒரு காரணியாகஉள்ளது.

    மாநகராட்சி கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் மாதாந்திர வாடகையை உயர்த்த தற்போது மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

    இது உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் வளர்ச்சியை மேம்படுத்தும். கிழக்கு புலிவார் ரோடு பகுதியில் வரி நிலுவை வைத்துள்ள காரணத்துக்காக ஒரு தியேட்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
    • வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி 600 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு 25 சதவீதம் 1,200 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 50 சதவீதம், 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம், மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது. இந்த சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் கேட்கப்பட்டன.

    பெருவாரியான மக்களிடம் ஆட்சேபனை எழுந்துள்ள நிலையில், வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் மறுசீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என நகராட்சி நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள்,1,263 வணிக நிறுவனங்கள், 546 தொழில் கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.சொத்துவரி மறுசீராய்வு தொடர்பாக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளன. தற்போது, பழைய வார்டுகளில் இருந்து புதிய வார்டுகள் மாற்றும் பணி நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய வார்டு அடிப்படையில், வீட்டு கதவு எண்கள் மாற்றி அமைக்கப்படும். அது வரை பழைய எண்களே பயன்பாட்டில் இருக்கும். மறுசீராய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்கு பின்பு துவங்கும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×