என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "taxes"
- வருவாயை பெருக்க அதிரடி முடிவு
- அதேநேரத்தில் வெளி மாநிலங்களின் மது விற்பனை விலையை புதுவை விலை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு சுயசார்பு டன் இருக்க கொள்கை நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய நிதித்துறை துணைச் செயலர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே சமீபத்தில் அனுப்பிய குறிப்பில் வருவாய் வளங்களை புதுவை அரசு பெருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் நலத் திட்டங்களுக்கு சொந்த வளங்களில் இருந்து நிதியை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு நிதி உதவியை கூடுதலாக ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சொத்து வரி, ஜி.எல்.ஆர். மதிப்பு மற்றும் பிற கட்ட ணங்களை அதிகரிக்க புதுவை அரசின் பரிசீலனைக்கான முன்மொழிவுகளைத் தொடங்க வருவாய் ஈட்டும் துறைகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார்.
அத்துடன் பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், வணிகவரி ஆகிய துறை களில் வருவாயை பெருக்கும் திட்டங்களை தொடங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. புதுவை அரசின் வரி வருவாயில் கலால் வரி வசூல் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
2022-23-ம் ஆண்டில், கலால் துறை ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட சுமார் ரூ.300 கோடி அதிக மாகும்.
இந்த நிதி ஆண்டின் கடந்த 3 மாதங்களில் கலால் வரி வசூல் சுமார் ரூ.476 கோடியை தொட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட அதிகமாக வசூலாகியுள்ளது.
கலால்துறையில் அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் கலால் வரியை இன்னும் கூடுதலாக உயர்த்தலாமா? என்ற ஆலோசனையும் அரசிடம் உள்ளது. அதேநேரத்தில் வெளி மாநிலங்களின் மது விற்பனை விலையை புதுவை விலை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது.
இதனால் கலால் வரி உயர்வினால் புதுவைக்கு வரும் மது பிரியர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உள்ளது.
அதுபோல் நேரடியாக மக்களை பாதிக்கும் வகையில் வரியை உயர்த்தவும் அரசிடம் தயக்கம் உள்ளது. இருப்பி னும் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
- வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தப்பட்டது
- விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வரவேண்டும் என பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி அறிவுறுத்தினார். பெரம்பலூரில் வருமான வரி துறை அலுவலகம் சார்பில் முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்
வருமானவரி செலு த்துபவர்கள் நான்கு தவணைக ளில் செலுத்த வேண்டிய நடப்பாண்டிற்குண்டான வரியில் 75 சதவீதம் மூன்றாவது தவணை வரியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். அப்படி செலுத்த தவறனால் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.
திருச்சி வருமான வரி அதிகாரி கண்ணன் வருமானவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரம்பலூரி வருமானவரி அதிகாரி உமாமகேஸ்வரி, மாவட்ட வணிகர் சங்க தலைவர் சண்முக நாதன் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட வருமான வரி அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் வருமான வரி ஆய்வாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
- கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.
மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.
இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.
திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- வரிகளை உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு வதைக்கிறது என்று தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
- எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட அ தி.மு.க. காந்தி மார்க்கெட் பகுதி கழகம் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில், அவுலியாக்கள் மூலம் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.
இதில், முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளரும், ஆவின் தலைவருமான கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், துணைச்செயலாளர் வனிதா, மீனவரணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, இன்ஜினியர் சிராஜுதீன், நத்தர்ஷா, தற்காகாஜா, பொன். அகிலாண்டம், காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், கன்னியப்பன், ஐ.டி.விங்க் பாபு. அஸ்ரப் ஜான். கேபிள் முஸ்தபா, ஜெயக்குமார், வி.எல்.சீனிவாசன், வண்ணாரப்பேட்டை ராஜன், ராஜசேகர், மாணவரணி குமார்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் தமிழ் மகன் உசேன் நிருபர்களிடம் கூறும்போது,
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
33 வது மாவட்டமாக திருச்சி மாநகர மாவட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.
சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்து எவ்வளவோ நல்ல பல திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தந்திருக்கிறார்கள். அவர்களின் வழியில் எடப்பாடி கே. பழனிச்சாமியும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை தி.மு.க. அரசு வாட்டி வதைக்கிறது. இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்படி சட்டப்பேரவை தேர்தல் வந்தால் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் சிறுபான்மையினர் சமுதாயம் யாருக்கு ஆதரவை தருகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். என்றார்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி இன்றிரவு அறிவித்துள்ளார். #PulwamaAttack #PakistanMFNstatus #MFNstatuswithdrawal #FMArunJaitley #goodsimportedfromPak #Customsduty #importedgoods
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்