search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers day celebration"

    • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • அனைவரையும் தலைமை ஆசிரியர் பாராட்டினார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் விஜய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா தாளாளர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதேபோல் ராமசாணிக்குப்பம்ஊ ராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் உள்பட மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி பிடிஏ ஆசிரியர்கள் நளினி, சசிகலா, சுமதி, ரேகா, தனி ஆசிரியர் ஜெயந்தி, வனிதா, பவானி, கிருஷ்ணவேணி உள்பட அனைவரையும் பாராட்டினார்.

    • மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
    • இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் அருள்ேஜாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலமும், இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி மூலமும் வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளியின் மாணவர் மன்ற தலைவி கீர்த்தனா வரவேற்றார். முடிவில் பள்ளியின் மாணவர் மன்ற துணை தலைவி ரிதுமிகா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட ப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களை கேட்டனர். ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர்.

    பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. ஆசிரியர்ளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    • பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது
    • மாணவி அபிநயா ஆசிரியர்களை பாராட்டி கவிதை வாசித்தார்.

    நெல்லை:

    பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் நல்லொழுக்கம், நல்ல சிந்தனை, விடாமுயற்சி ஆகியவற்றை கடைபிடித்து வாழ்வில் உயரவேண்டும் என்று பேசினார். மேலும் தன்னுடைய உயர்ந்த நிலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தன்னுடைய தலைமையுரையில் பாரதியாரின் சிறுகதை ஒன்றை கூறி அதன் மூலம் ஆசிரியர்களின் சிறப்புகளை மாணவர்கள் புரியும்படி எடுத்துக்கூறினார்.

    பள்ளியின் இயக்குனர் ராஜ்குமார் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறினார். முன்னதாக மாணவி சிவரஞ்சனி வரவேற்றார். மாணவி ரம்யா ஆங்கில உரையாற்றினார். மாணவி அபிநயா ஆசிரியர்களை பாராட்டி கவிதை வாசித்தார். மாணவி நாகஜோதி தமிழ் உரையாற்றினார். முடிவில் மாணவன் ஹரிஷ் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் இந்துமதி, துணை முதல்வர் சாந்தி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி,

    குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆசிரியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்பின் மேரி சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சார்பில் பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவர்கள் அளித்த சிறப்பான ஆசிரியர் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    ஊட்டி:

    ஆசிரியராக தனது பணியை தொடங்கி கடின உழைப்பாலும், நற்சிந்தனையாலும் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகள் கேக் வெட்டி, முதலாவதாக கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்திக்கு ஊட்டி விட்டனர். தொடர்ந்து அவருக்கு நினைவு பரிசாக சுவர் கடிகாரமும் வழங்கினர். இதற் கிடையே பேராசிரியர்களுக்கும் கேக் வழங்கப்பட்டது.

    இதையடுத்து பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கயிறு இழுத்தல் போட்டியானது ஆண்கள்- பெண்கள் மற்றும் பேராசிரியர்கள்- மாணவர்கள் இடையே நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டு அசத்தினர். பின்னர் மாணவிகளின் நடனம், ஓரங்க நாடகம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளே விழாவுக்கு ஏற்பாடு செய்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தது பேராசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில் விழா நடைபெற்றது. இதன் மூலம் நிர்வாகத்திறமை, ஆளுமை திறன் போன்றவை வளரும். வகுப்புக்குள் கல்வி கற்பதை போல மாணவ- மாணவிகள் கல்வி அல்லாத திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இளம் தலைமுறையினர் அடித்தளமாக விளங்க வேண்டும். வகுப்புகளில் அதிக மாணவ- மாணவிகள் இருக்கும்போது, அவர்களது தனிப்பட்ட திறமைகளை காண முடியாது. அதனை வெளிக்காட்டும்போது தான் ஆக்கப்பூர்வமான திறமைகள் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    விழாவில் விலங்கியல் துறை தலைவர் எபினேசர், வேதியியல் துறை தலைவர் சரஸ்வதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். 
    ×