என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "tease"
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடையும் நேரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நிருபர்களை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
மோடி பிரதமராக பதவி ஏற்ற 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பில் மோடி “நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் இது அமித்ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்று கூறி எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மோடி ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் நிருபர்கள் சந்திப்புக்கு வந்தது எங்களுக்கு பாதி வெற்றி கிடைத்தது. அடுத்த முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பதில் அளிக்க அமித்ஷா அனுமதி அளித்தால் நல்லது.
இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்தார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் மாவட்டத்தில் பதோனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெண்களை ஒரு கும்பல் ஈவ்டீசிங் செய்து வந்தது.
சம்பவத்தன்று இக் கும்பலை சேர்ந்த லால்சந்த் யாதவ் என்பவர் ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்து கொண்டிருந்தார். அதை அக்கிராமத்தை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் பெண் தடுத்து தட்டிக் கேட்டார்.
இதனால் லால்சந்த் யாதவ் ஆத்திரம் அடைந்தார். தனது கூட்டாளிகள் 3 பேருடன் அப் பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தார். அங்கு தனியாக இருந்த பெண்ணை அவர்கள் அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரது உடலில் இருந்த துணிகளை வலுக்கட்டாயமாக அகற்றி நிர்வாண மாக்கினர். அவரை கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தினர்.
இந்த கொடூர செயலை கிராமத்தினர் சிலர் ஈவு இரக்கமின்றி தங்கள் செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவன் கைது செய்யப்பட்டான்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க புதுவைக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வந்து இருந்தனர். அதேபோல் வாரவிடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதுவை ஆம்பூர்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளை ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கிண்டல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கடலூர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த மகிமைராஜ் (வயது42) என்பதும், வெல்டர் வேலை செய்து வரும் இவர் தீபாவளியையொட்டி புதுவையில் பொருட்கள் வாங்க வந்த போது குடிபோதையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகிமைராஜை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி பரமேஸ்வரி.
இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் வினோத்குமார் (26) கிண்டல் செய்தார். இது குறித்து பரமேஸ்வரி ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், இளம் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கண்டித்தார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.
வேலைக்கு சென்றிருந்த பரமேஸ்வரியின் கணவர் பிரேம்குமார் இரவு வீடு திரும்பினார். அப்போது தனது மகளை பக்கத்து வீட்டு வாலிபர் கிண்டல் செய்தது பற்றி தெரியவந்தது. எனவே, வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மேலும் ஆத்திரம் அடைந்த வினோத் குமார் பிரேம்குமாரை அடித்து உதைத்தார்.
இதுபற்றி பிரேம்குமார் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அனைவரும் பிரேம்குமார் வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் அருகில் உள்ள வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் வினோத்குமார் கத்தியை எடுத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உறவினர் மேரி (40) என்பவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார்.
ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ் (23), உறவினர் சங்கர் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காயம் அடைந்த மெர்லின், பிரேம்குமார் ஆகியோருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ஆல்வா. இவரது குடும்பத்தினர் புதுவை காவல் துறை தலைமை அலுவலகம் அருகே வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
டூப்ளே சிலை அருகே சென்ற போது, அவரை குடிபோதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கிண்டல் செய்தது. மேலும் அத்து மீறலிலும் ஈடுபட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி பெரிய கடை மற்றும் ஒதியஞ்சாலை, உருளையன் பேட்டை போலீசாருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆட்டோ டிரைவர்களான பிரபு (37), பிரகாஷ் (31), பாரதி (36), சதீஷ் (34) மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வினித்கவுர் (32), லூயி (37) என்பதும், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் உற்சாக மிகுதியில் மது குடித்து விட்டு போலீஸ் அதிகாரி மனைவியிடம் அத்து மீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார்.
அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது.
இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் (20) மற்றும் பார்த்தீபன் (30), நவ அரசு (20), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 6 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சிறுவன், கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.
பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவரது மனைவி அரியாங்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வர்மா, பிரகாஷ், சுந்தர் ஆகிய 3 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
அவர் வீட்டுக்கு வந்து ஜெயராஜியிடம் கூறினார். அவர் வந்து என் மனைவியை ஏன் கிண்டல் செய்கிறாய்? என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயராஜை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வீராம்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உதயசிங் (35). ஜிப்மர் ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது, 3 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதயசிங் ஓரமாக நில்லுங்கள் என கூறினார். எங்களை எப்படி ஓரமாக நிற்க சொல்லலாம்? என கூறி அவர்கள் உதய சிங்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உதயசிங் அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுவாமிமலை:
கும்பகோணம் தாலுகா களம்பரம் பகுதி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜேஸ்வரி(வயது45). இவரது மகள் பிரான்சிஸ் மேரி(17). மனநிலை பாதிக்கப்பட்டவர். அதே தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பிரான்சிஸ் மேரியை அடிக்கடி கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார்.
கடந்த 14-ந்தேதி இதேபோல் பிரான்சிஸ் மேரியை ராமதாஸ் கிண்டல் செய்தததை கண்ட ராஜேஸ்வரி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராமதாஸ் நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரான்சிஸ் மேரியை மானபங்கம் படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி தனது மகளை ராமதாசிடம் இருந்து மீட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து மனநிலை பாதித்த பெண்ணை மானபங்கம் படுத்த முயன்ற ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி (24). திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
முத்துலட்சுமி வேலைக்கு பஸ்சில் சென்று வரும்போது ரஞ்சித்குமார் அவரை பின் தொடர்ந்து வந்து கேலி- கிண்டல் செய்து உள்ளார். இதனை முத்துலட்சுமி பலமுறை கண்டித்தும் ரஞ்சித்குமார் தொடர்ந்து கேலி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரஞ்சித்குமார் மனைவியிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.