search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager dies"

    • தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார்.
    • எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆத்து மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜயன் (வயது 27), இவர் நேற்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார். பின்னர் மலைக்கோட்ட லத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது மலைக்கோட்டாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.
    • அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சரளை, பொன்முடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர் நேற்று நள்ளிரவு பெருந்துறையில் இருந்து சரளை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சிப்காட் ரவுண்டானா அருகே வந்த போது இவருக்கு முன்னால் சென்ற சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.

    அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட யுவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மதுரை மாட்டுத்தாவணியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ்சின் இருக்கையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் பிணமாக கிடந்தவர் மேலூர் அருகே உள்ள எஸ்.கல்லம்பட்டியைச் சேர்ந்த சேக் தாவூத் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த சேக் தாவூத் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மதுரையில் வேலை தேடுவதற்காக சம்பவத்தன்று தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி(24). இவரது நண்பர் மனோஜ்(20). இருவரும் காரில் நேற்று இரவு பேரையூர் வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பேரையூர்-வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது குறுக்கே விலங்கு பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்இடை இழந்த கார் சாலையோரம் உள்ள சிக்னல் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செந்தூர்பாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார்.
    • திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் அரச மர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாகாளி. இவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ரமேசுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. ரமேஷ் வீட்டுக்கு சரியாக செல்லாமல் மது போதை யில் ரோட்டோர ங்களில் படுத்து தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

    இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி ரமேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடல் ஈரோடு அரச ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

    மதுரை

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் குலசேகரபேரி, கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமியிடம் (வயது 29) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலியானார்.
    • கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    திருமங்கலம்

    மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் கவுதம் (வயது21). இவர் பைப் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அவனியாபுரம் நோக்கி வந்தார். அவர் பாரபத்தி கியாஸ் கம்பெனி பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற கவுதம் மீது மோதியது. இதில் கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுதம் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் முத்துக்கருப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள், தனியார் பஸ்கள் அதிவேகமாக வந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை முந்திசெல்ல முயற்சிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த விபத்தும் அதுபோல்தான் நடந்துள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் வேகமாக வரும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36).

    இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் இரவு 7.30 மணியளவில் ஈரோடு-சத்தியமங்கலம் செல்லும் தனியார் பஸ்சில் ஆப்பக்கூடல் பஸ் நிறுத்தத்தில் ஏறி பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

    அப்போது ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உடனே விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி இருசாயி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து கோட்டக்குப்பத்திற்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிள் கோட்டகுப்பம் சறுக்கு பாலம் அருகே சாலையை கடக்கும்போது புதுவை மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதியது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சசை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்
    • எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அய்யலூர் வ. உ. சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கிரண் ( வயது 32). இவர் ஒரு தனியார் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சிறுவாச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

    எடைய சமுத்திரம் பிரிவு சாலையில் சென்றபோது ராஜ்கிரண் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் இன்று காலை ராஜ்கிரண் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தவமணி என்ற மனைவி உள்ளார். விபத்து குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×