search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary bridge"

    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.
    • கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.

    நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. இரவும் கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலமோரில் அதிகபட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கோழிப்போர் விளை, குழித்துறை, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோர பகுதிகளில் கொட்டிய மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலை-குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. ஏற்கனவே அந்த பகுதியில் பழைய பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.

    தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதால் குற்றியாருக்கு சென்ற பஸ் திரும்பி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. கிழவி ஆறு, தச்சைமலை உள்பட 12 மலையோர கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


    தற்காலிக பாலத்தை சீரமைத்தால் மட்டுமே கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றியாறில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான குளிர் காற்று வீசுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக இருந்தது. அணைக்கு 1346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீராக 753 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1-நீர்மட்டம் 13.87 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 15.4, கன்னிமார் 7.2, கொட்டாரம் 3.4, மயிலாடி 2.4, நாகர்கோவில் 8.2, ஆரல்வாய்மொழி 8.2, பூதப்பாண்டி 15.2, முக்கடல் 17.6, பாலமோர் 70.4, தக்கலை 13.2, குளச்சல் 2, இரணியல் 8.4, அடையாமடை 12, குருந்தன் கோடு 10.4, கோழிப்போர்விளை 8.2, மாம்பழத்துறையாறு 24, களியல் 10.2, குழித்துறை 2.4, புத்தன்அணை 12.6, சுருளோடு 25.2, அடையாமடை 26.6, திற்பரப்பு 21.3, முள்ளங்கினாவிளை 7.4.

    • அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
    • தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சாலையில் கழிவுநீர் செல்ல பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் பலரும் விழுந்து காயமடைய நேரிடு அபாயம் உள்ளது.

    எனவே இந்த வடிகால் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக பாலம் அமைக்கப்பட்டால் தார்ச்சாலை போடும்வரை அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக அமையும். அதனால் நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து மக்களின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது.
    • மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாச முத்திரம் சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.

    புதிய பாலம்

    அதன் ஒருபகுதியாக மணிமுத்தாறு-கல்லிடைக்குறிச்சியை இணைக்கும் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய பாலத்தை உடைக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

    இதனால் மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதில் நீர் செல்வதற்காக குழாய் ஒன்றினை வைத்துவிட்டு அதன் மேல் மணல் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்து மண்ணரிப்பு ஏற்பட்டதால் தற்காலிக பாலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    விரைந்து முடிக்க வேண்டும்

    இதன் காரணமாக மணிமுத்தாறு ஜமீன் சிங்கம்பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு காவல் படையினரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே தற்காலிக பாலத்தை தரமாக அமைத்து, புதிய பாலம் வேலையையும் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×