என் மலர்
நீங்கள் தேடியது "test run"
- பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சென்னை மெட்ரோ ரெயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம் என தகவல் வெளியானது.
தொடர்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் இன்று நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன
- விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது.
கோவை,
கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராம ரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது.
உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் கோவை யில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனம் சமீபத்தில் பிரத்யேக சரக்கு விமான போக்குவரத்தை இந்தியாவில் தொடங்கி உள்ளது. டெல்லி, பெங்க ளூர், ஐதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவையை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக கோவையில் கடந்த மாத இறுதியில் கோவை - ஐதராபாத், கோவை - பெங்களூர் நகரங்களுக்கு இடையே சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக செலவாகும் எரிபொருளின் அளவு, சரக்குகள் கையாளும் திறன், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
கோவையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல இரு பன்னாட்டு நிறு வனங்களின் பொருட்கள் சேமிப்பு குடோன்கள் செயல்படுகின்றன.
சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதத்தை சரக்கு விமான சேவை குறைக்கும்.
சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் சரக்கு விமான சேவையை கோவையில் தொடர்ந்து செயல்படுத்த அந்த நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்
கோவை,
தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
இந்த ரெயில்கள் என மொத்தம் கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ள வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையானது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கினால் நன்றாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தற்போது அவர்களின் கனவு நனவாக உள்ளது. வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி கோவை-சென்னை இடை யே வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கி வைக்க உள்ளார்.வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ள செய்தி கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதனை யொட்டி இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக முற்பகல் கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மாலை 6.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.இன்று நடந்த இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்று ரெயிலில் பயணித்தனர். விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளதும், இதனையொட்டி சோதனை ஓட்டம் நடந்ததும் கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கோவை மக்கள் கூறியதாவது:-
கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் ேசவை தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
விரைவில் கோவை-பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி, வழித்தடத்தில் விலங்குகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கேற்ப ஊழியர்களை பணியில் அமர்த்தி சீரான முறையில் கண்காணிக்க வேண்டும். இந்த ரெயில் சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது.
- வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் மேம்பாலம் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்த மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நிலையில் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டு அதன்பிறகு தொடங்கப்பட்டது.
தற்போது மேம்பால பணிகள் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக சோதனை ஓட்டம் நடத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இன்று காலை 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலத்தை திறந்துவிட்டனர். தற்போது மேம்பாலத்தில் ஏறி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் 2 அல்லது 3 நாட்கள் சோதனை ஓட்டம் இருப்பதால் காலையில் இருந்து மாலை வரை இந்த மேம்பாலத்தில் ஏறி சென்று வரலாம். மேம்பால மின்சார கம்பங்கள், சென்டர் மீடியன் வேலை, பெயிண்ட் வேலை இரவில் செய்யப்படுவதால் இந்த மேம்பால வழி தற்காலிகாமாக இரவில் இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் இந்த பாதையில் இனி நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணபதி, சரவணம்பட்டி பகுதியில் இருந்து இந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் கணுவாய் , – ஆனைக்கட்டி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையை அதாவது ஜி.என்.மில்ஸ் பாலத்தை கடந்து சத்தி சாலைக்கு செல்லமுடியும் என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருந்தது. தற்பொது மேம்பாலம் பணிகள் முடிவுற்றதால் கோவையில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னூருக்கு சென்று வர இனி எளிதாக இருக்கும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.
- மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.
- முன்னோட்ட நடவடிக்கையாக அதிவேக பரிசோதனை ரெயில் இயக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது.
இந்த ரெயிலானது திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டு க்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு சோதனை ஓட்டமாக 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்க ப்பட்டது.
இந்த அதிவேக ரெயில் சோதனை ஓ.எம்.எஸ் என்ற கருவி மூலம் அளக்க ப்பட்டு எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து தடம் சீரமைக்கப்பட்டு பயணிகள் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
இதன்படி மின் மயமாக்கு வதற்கு தேவையான நடவடி க்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.
இதன் முன்னோட்ட நடவடி க்கையாக அதிவேக பரிசோ தனை ரெயில் இயக்கப்பட்டது.
இந்த ரெயிலுக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் உபயோ கிப்பாளர் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் துரை ராயப்பன், அரசு வக்கீல் பாஸ்கர், செயலாளர் எடையூர் மணிமாறன், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- திண்டுக்கல்-பழனி மின் பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
- மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
திண்டுக்கல்-பழனி இடையே 58 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்து விட்டன.
இந்த ரெயில் பாதையில் இன்று (13-ந் தேதி) முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த் ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை மின்மயமாக்கல் இயக்குனர் சமீர் டிஹே, முதன்மை சைகை பொறியாளர் சுனில், முதன்மை மின் பகிர்மான பொறியாளர் சுரேந்திரன், மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல்-பழனி இடையே சிறப்பு ரெயில் மூலம் ஆய்வு நடந்தது. இதனைத்தொடர்ந்து சிறப்பு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடந்தது.