என் மலர்
நீங்கள் தேடியது "textile shop"
- தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.
சிவா டெக்ஸ்டைல்ஸ்
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் போடி பிரிவு அருகே தனியார் ஜவுளிக்கடை உள்ளது. ஆண்டிபட்டியை சேர்ந்த அஜித் (வயது26) என்பவர் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய பஸ் நிலையம் எதிேர நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அதை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார்.
ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஜவுளி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பைப் குமார் (42), திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா(43) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி :
அவினாசியை அடுத்து முத்துசெட்டிபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சக்திகுமார்(வயது 30) .ஜவுளி கடையில வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (25). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த சக்திகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அவினாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் பாண்டியன் மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று வியாபாரம் முடிந்து கடை பூட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கடையின் மேல் மாடி வழியாக மர்ம நபர்கள் குதித்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இருப்பினும் பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன் முடிவில் எவ்வளவு பணம் கொள்ளை போனது, வேறு ஏதாவது பொருள் கொள்ளை போனதா? என்பது தெரியவரும்.
மேலும் கடையில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியது.
- இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை கடையின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவிய தால் முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் கும்பகோணம், திருவிடை மருதூர் தீயணைப்பு துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்க ப்பட்டது.
மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை:
பிரபல ஜவுளி கடைக்கு சொந்தமான குடோன் தி.நகர் பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் இருந்து இன்று அதிகாலை புகை வந்தது. கடையின் காவலாளி புகை வருவதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தேனாம்பேட்டை நிலையத்தில் இருந்து 2 வாகனங்கள் வந்தன. தீயணைப்பு படை வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதிகாலை நேரம் என்பதால் வாகன நெரிசல் எதுவும் இல்லை. தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த தீ விபத்தில் குடோனில் கட்டு கட்டாக இருந்த துணிகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பெரிய அளவில் ஏற்படக் கூடிய தேசம் உடனடியாக தீயை அணைக்கப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தி.நகர் ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
- 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
4வது மாடியில் உள்ள ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில் பிரபல ஜவுக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் ஜவுளிக்கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்ைப பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை
மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி (வயது 52). தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது.
இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், மீனாட்சி கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில், விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் உமாதேவியிடம் பணப்பையை பறித்தது பெண் என்றும், அவர் மேலூர் மில் கேட் சிங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி என்ற லதா (45) என தெரிய வந்தது. இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர்.
- சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
- படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
ஈரோடு, ஆக. 26-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.
இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.
அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.