search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The lake is full"

    • உபரிநீர் திறக்க ஏற்பாடு
    • 5 கிமீ தூரம் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு

    கண்ணமங்கலம்:

    கடந்த வாரம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் படவேடு பகுதியில் உள்ள தாமரை ஏரி கடல் போல நிரம்பி வருகிறது. 25 ஆண்டுகளாக தாமரை ஏரி நிரம்பாமல் தண்ணீர் வரத்து கால்வாயில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.

    இந்த நிலையில் புதூர் பகுதியில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயை சீரமைத்து வழி நெடுகிலும் சுமார் 5 கிமீ தூரம் நீர்வரத்து கால்வாயை ஜேசிபி மூலம் சீரமைத்து கடந்த ஆண்டு உபரிநீர் திறக்கப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் சிறப்பு பூஜை செய்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த ஆண்டும் பெய்த மழையில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் பேரில், 2-வது ஆண்டாக தாமரை ஏரியில் கடல் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    படவேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட விவசாயிகள் சார்பில் விரைவில் சிறப்பு பூஜை செய்து இந்த ஆண்டும் உபரிநீர் திறக்கப்படஉள்ளது என்று படவேடு பகுதியில் வசிக்கும் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

    • உபரி நீரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
    • ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

    ஆரணி:

    ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலேயே மிகப்பெரிய ஏரியாக மேல் சீசமங்கலம் ஏரி விளங்குகின்றன.

    இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 665 ஏக்கர் கொண்டது. இந்த ஏரி கடந்த 10ஆண்டுகளாக ஏரி நீர் நிரம்பாமல் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ள ளவை எட்டியது.

    மேலும் அதே போல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகின்றன.

    இதனால் தற்போது மீண்டும் மேல்சீசமங்கலம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மேல்சீசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் தலைமையில் கிராம பொதுமக்கள் ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் மேல்சீசமங்கலம் ஏரி உபரி நீரை வெளியேற்றி மலர் தூவி வரவேற்றனர்.

    இதனால் மேல் சீசமங்கலம் திருமணி முனுகபட்டு நாவல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கிளல் உள்ள ஏரிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் எனவும் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மலர் தூவி வரவேற்பு
    • கால்வாயில் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி சமீபத்தில் பெய்து வந்த தொடர் மழையால், சிங்கிரி கோவில் அணைக்கட்டு பகுதியில் இருந்து நீர் வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வழிந்தது.

    இதையடுத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து மேளதாளத்துடன் கொளத்தூர் உபரிநீர் வழிந்தோடும் இடத்திற்கு வந்தனர். அங்கு விவசாயிகள் சிவாஜி, நடராஜன், ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடிதிருமால், ஒன்றிய கவுன்சிலர் குமார்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ரெஜினால்டு ஜேம்ஸ் உள்பட கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து, மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர். இதில் கிராம பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய் வழியாக கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. ஏற்கனவே கண்ணமங்கலம் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் வழிந்தோடுகிறது.

    கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறை சார்பில் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் ஏரி முழுவதும் நாற்றமெடுத்து வருவதாக ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கரை மீது புல் பூண்டுகள் வளர்ந்து நடந்து செல்லமுடியாமல் விவசாயிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    • பூஜை செய்து, ஆடு வெட்டி பொதுமக்கள் கொண்டாட்டம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நிரம்பி வருகிறது.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலி ஊராட்சி ஒன்றிய கந்திலி ஏரி 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த ஏரி கடந்த 29 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது கடந்த முறை பெய்த மழையில் கூட ஏரி நிரம்ப வில்லை தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.

    இதன் காரணமாக நேரில் இருந்து உபரி வெளியேறுகிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, தலைமையில் ஏரியில் பூஜை செய்து மலர் தூவி ஆட்டுக்கிடா வெட்டி பிரியாணி சமைத்து ஊருக்கு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ஜெகதீசன், ஜோதி, இளங்கோ, குமார், கருணாநிதி, அன்சர், கிஷோர், தண்டபாணி, தமிழகுமார், மற்றும் ஊர் நாட்டாண்மை பெருமாள், துணை தலைவர் உஸ்மான், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ×