என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager died"

    • தன்னிடம் தகவல் தெரிவிக்காததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி,

    வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 25). இவர் வெளியூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    தீபாவளி விடுமுறையையொட்டி ரஜினி ஊருக்கு வந்துள்ளார். அப் போது அவருடைய அண்ணன் ராஜே சுக்கு இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் மனமுடைந்த ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள், செல்போன் ஆகியவை கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பானேரி குளம் பகுதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரஜினியை பிணமாக மீட்டனர். உடலை தீயணைப்பு துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்குப்ப திவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அண்ணனின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • யார் அவர்? விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த கிங்கினி அம்மன் கோவில் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் பைக்கில் இருந்து தவறி சாலை ஓரம் விழுந்து கிடந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புத்தாண்டு தினத்தில் அதிக மது குடித்த நிலையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை அவல்காரர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவரது மனைவி மோனிகா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடி பழக்கத்திற்கு ஆளான அருண்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மோனிகா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    கடந்த புத்தாண்டு தினத்தன்று இரவு அருண்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.

    வீட்டின் அருகே நடந்து சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மோனிகா அவரை தேடிச் சென்றார்.அப்போது கால்வாயில் அருண்குமார் விழுந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார்.

    உடனடியாக அவரை மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா.

    அவரது மகன் ஷாதிக்பாஷா (வயது 33). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி முபினா மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் வந்துள்ளார்.

    தொடர்ந்து உறவினருடன் இரவில் ஏலகிரிகிராமம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் வீட்டிற்கு செல்ல உறவினர் பைக்கை எடுத்த போது சாதிக் பாஷா சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் உறவினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லாததால் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது சாதிக் பாஷா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சாதிக் பாஷாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அங்கேயே இருந்தது.

    இரவு நேரம் என்பதால் அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர். நேற்று காலையில் மதகு அருகே ஏரியில் சாதிக் பாஷா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் நாற்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து இருந்த சாதிக் பாஷாவின் உடலை மீட்டனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    • மாடு விடும் விழாவில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 24) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக வெங்கடேசன் சென்றார்.

    அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று வெங்கடேசனை முட்டி தூக்கி வீசியது.

    இதில் அவரது தலை தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கட்டில் பயணம் செய்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஒரிசா மாநிலம் ரூர்கேலா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூர் வரை செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி கேத்தாண்ட ப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.

    அப்போது படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா வழக்கு பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    காட்பாடி விரிஞ்சிபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வடுகன்பட்டி என்ற இடத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஓடும் ரெயிலில் தவறி விழந்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

    அவரை அங்கிருந்து பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    • திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கே.ஜி.வலசு, மேற்கு தலவுமலை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் 2-வது மகன் மனோஜ்குமார் (20). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் மனோஜ்குமாருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்தது.

    இதனையடுத்து அவர் தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது குடல் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்.

    பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மனோஜ்குமாருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஈரோட்டில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்குமார் சேர்ந்தார்.

    இந்நிலையில் திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • சாலையை கடந்த போது விபரீதம்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் காட்பாடி சாலையை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி வாலிபர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வாலிபரின் சட்டையை சோதனை செய்தபோது அவரது ஆதார் கார்டு இருந்தது. அதில் அசாம் மாநிலம் சிராங் பகுதியை சேர்ந்த பிக்கின் முச்சாரி (வயது 30) என தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கி இறந்த வாலிபர் வேலூரில் வேலை செய்து வருகிறாரா அல்லது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் தென்னரசு (30). சம்பவத்த ன்று இவர் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கடன் தொல்லையால் இறந்தாரா?
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஏகாம்பரநல்லூரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் சிப்காட்டில் உள்ள தனியா தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ஹரிஹரன் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் ஹரிகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காட்பாடி ெரயில்வே போலீசார் ஹரிகரன் உடலை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் ஒயர் மீது கை உரசி பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ஊராட்சி மேக்னா பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் தினகரன் (வயது 24), லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை ஆம்பூர் பெரிய வரிகத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு லோடு ஏற்றி சென்றார்.

    தொழிற்சாலையில் லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்பாயை கழற்றினார்.

    அப்போது தினகரனின் கை, லாரியின் மேல் புறத்தில் சென்ற மின் ஒயர் மீது உரசியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தினகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×