என் மலர்
நீங்கள் தேடியது "theerthavari"
- திருக்கல்யாணம் 13-ந்தேதி நடக்கிறது.
- தேரோட்டம் 15-ந்தேதி நடக்கிறது.
- கடைமுக தீர்த்தவாரி 16-ம் தேதி நடக்கிறது.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1-ந் தேதி துலா உற்சவம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கொடிமரம் அருகே விநாயகர், அஸ்திர தேவர் எழுந்தருளினர்.
அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தருமபுரம் ஆதீனக் கட்டளை சிவகுருநாத கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், பூஜைகளை செய்து வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 13-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), தேரோட்டம் 15-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை), கடைமுக தீர்த்தவாரி 16-ம் தேதியும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.
பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் 16-ந் தேதி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
- காவிரியின் இரு கரைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைெபறுவது வழக்கம். அப்போது மாயூரநாதர், ஐயாறப்பர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு கடைமுக தீர்த்தவாரி நேற்று நடந்தது. மாயூரநாதர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெறவில்லை.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும், தென்கரையில் திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சாமிகள் முன்னிலையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரியையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.
விழாவில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- காவிரி தாய்க்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
- திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் மயிலாடுதுறையில் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடப்பட்டதாக ஐதீகம். முன்பு ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது.
இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்கமுடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை.
அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்தபக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது.
இதையொட்டி காவிரி தாய்க்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
- ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் ஒவ்வொரு சாமிகளும் அலங்காரம் செய்து நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து தேவகோட்டை விருசுழி ஆற்றின் ஒத்தக்கடை அருகே ஒன்று சேர்ந்தது.
ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றன. இவ்விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல், அடசிவயல், பூங்குடி, திருமணவயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
- 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
- அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் சந்திர, சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
3 குளங்களில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குளங்களில் புனித நீராடி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று (திங்ட்கிழமை) காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி காலை 11.40 மணியில் இருந்து பகல் 11.50 மணி வரை நடக்கிறது.
அதில் லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சானூரில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தை சிரமமின்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் பக்தர்கள் ஓய்வெடுத்ததுப் போக மீதி உள்ள பக்தர்களுக்கு திருச்சானூர் அய்யப்பன் கோவில், ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, புடி ரோடு ஆகிய இடங்களிலும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தேநீர், காபி ஆகியவை வழங்கப்படும். பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரம் அனுப்பி வைக்கப்படும். பட்டு வஸ்திர ஊர்வலம் பாதுகாப்பாக நடத்தப்படும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் வெளியே புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடப்பதால், அதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் ஷெட்டுகளில் இருந்து பக்தர்கள் புஷ்கரணிக்குச் செல்ல சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று புனித நீராட வசதியாக உள்ளே செல்லும் வழி, நீராடி விட்டு புஷ்கரணியில் இருந்து வெளியே போகும் வழி அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 500 போலீசாரும், இதுதவிர திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேவஸ்தான ஊழியர்களுடன் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு சேவைகளை செய்வார்கள். பக்தர்கள் அனைவரும் பொறுமை காத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
- நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.
பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.
காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.
இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
- அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது.
- 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி தினந்தோறும் நான்கு வீதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று காலை 9 மணிக்கு கோவி்ல் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள், 50 தவில் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமம் செய்யப்பட்ட கடஅபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கொட்டும் மழையில் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளத்தின் நான்கு புறமும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூரிய புஷ்கரணியில் இறங்கி நீராடி வழிபட்டனர். பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வி. சிவலிங்கம், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, ஆர். பாலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரிதுரைராஜ், திருநாகேஸ்வரம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்ட கோவில் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தா. உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
- அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அரக்கனால் தனது சக்தியை இழந்த சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம்.அந்த வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாத கடைஞாயிறையொட்டி குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது.
இதை முன்னிட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரர், மன்மதீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து சாமி மற்றும் அம்மன், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், வெள்ளி மயில்வாகனத்திலும், வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி ஊர்வலமாக காவிரி கரைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
இதை தொடர்ந்து சாமிகளுக்கு ஒரே நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும் என புராண வரலாறு கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி தீர்த்த வாரி நடந்தது.
முன்னதான மேளம், தாளம் முழங்கிட அஸ்திரதேவர் ஊர்வலமாக குளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
- குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் சிவன் கோவில் எதிரில் உடையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஐயப்ப குருசாமி தங்கமணி தலைமை தாங்கினார். ஐயப்ப குருசாமி கள் அப்பாராசு, குணசேகரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோவில் குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பன்னீர், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐயப்ப குருசாமிகள்அனைவரும் கோவில் குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
இதில் ஐயப்ப குருசாமிகள் மணியரசன், இளையராஜா, சதீஷ், மணிகண்டன், விஜி, அம்பிகா, பாரதி, ஜெயகாந்த், மனோகர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம்.
- வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம். இந்த கோவில் புராணகாலத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களும் தங்கி இறைவனை வழிபட்டதாக வரலாறு.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் தன்னை வழிபட்ட நான்கு வேதங்களுக்கும், சாமி காட்சியளித்து சிறப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெற்று வருகிறது.. அதன்படி ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காலை நான்கு வேதங்கள் சாமி சன்னதியில் எழுந்தருளியது.
சிறப்பு தீபாராதனைக்கு பிறகு நான்கு வேதங்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது. நாகை சாலையில் உள்ள புனித தீர்த்தமான வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஏரி படித்துறையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வேதாமிர்த ஏரியில் புனித நீராடிசாமி தரிசனம் செய்தனர்.