என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thieft"

    • திருச்சியில் ஓடும் பேருந்தில் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிந்த விசாரணை

    திருச்சி,

    திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதி–யைச் சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது லேப் டாப்புடன் ெநம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் ஒரு டவுன் பஸ்சில் வீடு திரும்பினார். பின்னர் பஸ் நிலையம் வந்ததும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பார்த்தபோது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் ஓடும் பஸ்சில் லேப்டாப்பை திருடிக்கொண்டு இறங்கி சென்று விட்டனர். இதுகுறித்து குமார் கொள்ளிடம் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
    • நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

    கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லோகம்மாளின் கம்மலை பிடிங்கி சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

    இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த மாதம் மகனை பார்க்க சென்றார். அவரது வீட்டின் பூட்டும் இன்று உடைக்கப்பட்டு கிடந்தது.

    ஆனால் அவரது வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பிடிங்கி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    போலீசார் விசாரணையில் இதே கும்பல் தான் மற்ற 2 வீடுகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    பிரைன்ட்நகரை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (55). இவர் பிரைன்ட்நகர் 7-வது தெருவில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    இவர்கள் இருவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவந்தாகுளம் பெருமாள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. மேலும் இதே வாலிபர்கள் பரமேஷ்வரன் கடையிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    அதன்பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் (20), ராம்குமார் (22) மற்றும் செல்வராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது திருச்செந்தூர், தூத்துக்குடி வடக்கு, மத்திய, தென்பாக காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ×