என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirumavalavan MP"
- சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிகாலையில் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன் தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, புலிப்பானி ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்பு தனியார் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உதவியாளருடன் சென்று விட்டார்.
- தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
- சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.
கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.
திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.
இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.
தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
- மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.
கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.
மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.
மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.
பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.
மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.
காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.
பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.
ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.
தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .
அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களக்காடு சுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் முத்து வளவன், எம்.சி. சேகர், அருள் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் காளிதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
- பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்