என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvarur"

    • சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
    • மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.

    திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.

    மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.

    • தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
    • மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.

    மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

    • அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்திருந்தது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.

    இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்பி அரசு நிர்வாக குழுமம் சார்பில் வலங்கைமானில் 100 பேருக்கு நானோ யூரியா திரவம் வழங்கப்பட்டது.
    நீடாமங்கலம்:

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா (நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட) ஆலையை தொடங்கி வைத்து நேற்று சிறப்புரை ஆற்றினார்.
     
    அந்த நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஆர்பி அரசு நிர்வாக குழுமம்  சார்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்சார்பில் 500மி.லி., அளவிலான, ரூ.240 மதிப்புள்ள நானோ யூரியா திரவம் இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 100 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் யூரியாவிற்கும் நானோ யூரியா விற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை இஃப்கோ  நிறுவன மேலாளர் சந்தோஷ்குமார் விவசாயிகளிடையே விளக்கினார்.

    இதில் ஆர்பி அரசு நிறுவனர் விஜயராகவன், பா லகிருஷ்ணன் மற்றும் விவசாய தொழில் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இது விவசாய தொழில் புரிவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டுள்ளது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவருமான வழக்கறிஞர் மோகன் கலந்து கொண்டு பள்ளியில் படித்த 10 மற்றும்

    12-ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி பேசியதாவது:-

    வருகின்ற 2022-ம் ஆண்டு நம் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்படும்.

    12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார்.
    • மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

    அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருண், ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் (பொ) ஜெயலட்சுமி, தாமோதரன், தலைமையாசிரியை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த பள்ளியில் பயிலும் மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால்அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
    • நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டச் அ.தி.மு.க. செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    இதனை முன்னிட்டு நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மேலும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு விவசாயத்தை பாதுகாத்த எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் வருகை தருவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகளும், செயல் வீரர்களும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலபாதை வழியே சென்னை-ராமேஸ்வரம் ரெயிலை இயக்க வலியுறுத்தப்பட்டது.
    • இந்திய ரெயில்வே அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு சென்னை - ராமேஸ்வரம் ரயில் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலரயில் பாதை வழியே இயக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பார்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் -காரைக்குடி அகல ரெயில் பாதை ரூ .1500 கோடி செலவில் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயில் திருச்சி, காரைக்குடி வழியே செல்கிறது.

    ராமேஸ்வரம் செல்லும் ரயிலை திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் இயக்கினால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் குறையும்.

    எரிபொருளும் அலைச்சலும் பயணிகளின் பயண செலவு மிகவும் குறையும். எனவே இந்திய ரெயில்வே அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு சென்னை - ராமேஸ்வரம் ரயில் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலரயில் பாதை வழியே இயக்க வேண்டும். மேலும் புறக்கணிக்கப்பட்ட ரெயில்களை இயக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவாரூரில் இன்று பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல கல் மனிதர் என்று கடுமையாக சாடினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருவாரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட முக ஸ்டாலின், இன்று திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முதலில் திருவாரூரில் உள்ள கழக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிப்பெற்று, வீதிவீதியாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



    பின்னர் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்  செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    மறைந்த தலைவர் கருணாநிதியின் வசனங்களைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.

    மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.

    இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?

    மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.

    கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.  

    இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    ×