search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tibet"

    • மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா பேசினார்
    • அதிக்ராபூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும்

    எல்லைப் பிரச்சனைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

    அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடக விளங்கும் சீனா சமீப காலமாக திபெத், லடாக் எல்லாப் பிரதேசங்களில் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது, சீன வரைபடத்தில் இந்திய பகுதிகளில் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. இருநாட்டு வெளியுறவுத் துறையும் சம்பிரத்யமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், சீனா அதை செயலில் காட்டவில்லை.

    இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா, லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை சட்டப்பூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    லே லடாக், அருணாச்சல் பிரதேஷ், சிக்கிம் என திபெத் வரை 1400 கிலோமீர் வரை எல்லைப் பகுதி நீண்டுள்ளது. இது சீன எல்லை கிடையாது திபெத் எல்லை என்றே குறிப்பிட்டுள்ளார். இதக்கிடையில் நேற்று எல்லையில் உள்ள  பாங்காங் நதியின் சீனா கட்டிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    • எஸ்.எஃப்.டி. எனும் அமைப்பு நீண்டகாலமாக திபெத் விடுதலைக்கு போராடுகிறது
    • திபெத்திய குழுந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து சீனா பிரிக்கிறது

    கிழக்கு ஆசியாவின் மத்தியில் உள்ள நாடு திபெத். 1950-ல் திபெத்தை தன்னுடன் இணைத்து கொண்டு விட்டதாக சீனா அறிவித்தது. ஆனால், அப்போது முதல் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்நாட்டவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

    தற்போது இந்தியாவில் ஜி20 உறுப்பினர் நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும் டெல்லி வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், உலக தலைவர்களுக்கு தங்கள் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி. எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா நகரத்திற்கு வெளியே மெக்லியாட் காஞ்ச் எனும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த அமைப்பின் இயக்குனர் டென்சின் பசாங்க், "எங்கள் கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிக்கும் விதமாக சீனா தொடர் முயற்சிகளில் ஈடுபடுகிறது. எங்கள் கல்வி அமைப்புகளின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய 4-வயது குழந்தைகளை கூட பெற்றோர்களிடம் இருந்து பிரித்து சீனாவின் உறைவிடப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கிறது. இதனால் அக்குழந்தைகளுக்கு நாளடைவில் எங்கள் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவையுடன் அறவே தொடர்பில்லாமல் போகிறது," என்று தெரிவித்தார்.

    இதே அமைப்பின் பிரச்சார இயக்குனர் டென்சின் லெக்தென், "ஜி20 தலைவர்கள் இது குறித்து பேச வேண்டும். குறிப்பாக, காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் சீனாவின் பள்ளிகளில் திபெத்திய குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்படுவதையும், திபெத் முழுவதும் சீனா செய்து வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேச வேண்டும்," என்று கூறினார்.

    மானசரோவர் யாத்திரையின் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 57 பக்தர்கள் இன்று காலை லிப்புலேக் கணவாய் வழியாக புறப்பட்டுச் சென்றனர். #Mansoravar #Mansoravarpilgrims
    பித்தோராகர்:

    திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கயிலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

    மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலாய மலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ‘சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ‘கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.

    மானசரோவர் ஏரியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.

    இந்து மதத்தின்படி மானசரோவர் ஏரி பரிசுத்தம் அல்லது தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் நீரைப் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கயிலாய மலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர்.

    இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இந்த ஏரியில் புனித நீராடி மகிழ்கின்றனர்.

    மானசரோவர் ஏரியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981-ம் ஆண்டுவரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் மானசரோவரில் பதியத் தொடங்கின.



    இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி. குப்தா கடந்த 15-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா கணவாய் வழியாகவும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நாது லா கணவாய் வழியாகச் செல்வதற்கு கடந்த ஆண்டு சீன அரசு தடைவிதித்தது. டோக்லாம் எல்லை பிரச்சினை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    டோக்லாம் பிரச்சினை தீர்ந்துள்ளதால் இந்த ஆண்டில் மீண்டும் நாதுலா கணவாய் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 57 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு, மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக இன்று மானசரோவர் புறப்பட்டு சென்றது. #Mansoravar #Mansoravarpilgrims #Firstbatch
     
    ×