என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tik Tok"
- அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த இங்கிலாந்து தடை விதித்தது.
- பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
சிட்னி:
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாதுகாப்பு கருதி இங்கிலாந்து அரசு நடவடிக்கையினை எடுத்து உள்ளது.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து உள்ளது. இங்கிலாந்து அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது.
ஆனால் தங்கள் சொந்த போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை இல்லை என்றும் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
- காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் டிக்-டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:
இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
- பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிபான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயலிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
- அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனும் புதிய ஆப்பிள் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காஜி பேட்டையில் இருந்து பாலாஷா சென்ற பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளம் அருகே அக்ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரெயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்ஷய் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
#Why pic.twitter.com/xFuG0UN2h4
— Vishal Dharm (@VishalDharm1) September 4, 2022
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
எனவே அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பரக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. கோர்ட்டு உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.
இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #TikTok #MaduraiHighCourt
‘டிக்டாக்’ செயலியில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாவதால் அந்த செயலிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த செயலியின் சீன நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, கோடிக்கணக்கான செல்போன் செயலிகள் உள்ளன. ஐகோர்ட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்காமலும், அதன் கருத்தை கேட்காமலும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #TikTok #SupremeCourt
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில் நிலையம் ரோட்டில் ராமகிருஷ்ணா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிகவியல் ஆசிரியரை ஏளனம் செய்தும், நாற்காலியை இழுத்து போட்டு அவரை உட்கார விடாமல் தரக்குறைவான முறையில் நடந்து கொண்டு ராக்கிங் செய்து அந்த வீடியோக்களை டிக்டாக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோ பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சிவா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களிடம் நடந்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேசி மாணவர்களின் ஒழுங்கீன தன்மையை எடுத்துக்காட்டினர்.
ஏற்கனவே அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாபு என்பவரை கத்தியால் குத்திய மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டு ஆசிரியர்களை அவதூறாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து 6 மாணவர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் சிவா உத்தரவிட்டார்.
மேலும் அவர்களை தேர்வு நேரத்தின் போது மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவும் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tiktok
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்