என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN budget"

    • 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
    • லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.

    குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.

    குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
    • திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,

    தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.

    தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

    ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.

    திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று கூறியுள்ளார். 



    • சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
    • வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் உரையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ரூ.110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும். மக்களின் முதல்வர் திட்டத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 4 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

    வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    • மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
    • நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.

    நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
    • காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 25 லட்சம் பட்டாக்களை வழங்கி உள்ளேன்.

    * மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் விளம்பரம் செய்வதிலே தி.மு.க. அரசு கவனமாக உள்ளது.

    * முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.

    * புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என்பது வெற்று அறிவிப்பு.

    * கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் என பொய்யாக கூறி உள்ளனர்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தை தான் தி.மு.க. அரசும் செய்கிறது.

    * நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.

    * நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கை என்ன? அதை அரசு செயல்படுத்தியதா? என்ற வெள்ளை அறிக்கை இல்லை.

    * காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.

    * காலை உணவுத் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் கிடையாது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்கள் என சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

    * திடக்கழிவில் இருந்து மின்சாரம், சென்னை அருகில் புதிய நகரம் போன்ற அறிவிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை.

    * வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள், காலை உணவுத்திட்டம் போன்றவை புதிய திட்டங்கள் அல்ல.

    * 3.5 லட்சம் காலிபணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், ஆனால் 57000 பணியிடங்களுக்கு தான் நியமனம்.

    * 4 ஆண்டுகளில் 57,000 காலிப் பணியிடங்களை தான் தி.மு.க. அரசு நிரப்பி உள்ளது.

    * ஓராண்டில் மட்டும் எப்படி 40,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியும்.

    * ஓராண்டு காலத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்ற முடியாது.

    * டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்!
    • விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

    சென்னை :

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்

    ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

    இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்

    தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்

    புதிய நகரம்

    புதிய விமான நிலையம்

    புதிய நீர்த்தேக்கம்

    அதிவேக ரயில் சேவை

    என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

    'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட்2025!

    நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார். 



    • 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
    • பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்.

    * 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.

    * சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே?

    * பெட்ரோல், டீசலுக்கான விலைக்குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது?

    * மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்த அறிவிப்பு இல்லை.

    * பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

    * ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்ற அறிவிப்பு இல்லை.

    * கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள தி.மு.க. அரசு.

    * கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது.

    * பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
    • கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்:-

    * திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கான ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை மெட்ரோ ரெயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    * மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக இது அமையும்.

    * கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.

    * நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

    * ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.

    • ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் வெளியான அறிவிப்பில் சில:-

    * அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.

    * மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திப்பதிவுகளுக்கு இது பொருந்தும். 

    * ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

    • வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * 2025-26-ம் நிதியாண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாயாக வரி வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

    * 2025-26-ம் நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    * மாநிலத்தின் சொந்த வருவாய் 14.6 சதவீத அளவில் வளர்ச்சி பெறும்.

    * அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது.

    * 2024-25 நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி.

    * மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.

    * பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதியை மத்திய அரசு மறுப்பதால் மாநில அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    * மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டுள்ள நாம் வரியை அளிப்பதில் 9 சதவீதமாக உள்ளோம்.

    * மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.

    * வரும் மூலதன பணிகளுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு.

    * வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும்.

    * வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக இருக்கும்.

    * வரியல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
    • சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் சில:-

    * தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.

    * கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.

    * சேலம், கடலூர், நெல்லையில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூடம் வசதிகளடன கட்டப்பப்படும்.

    * தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    • சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.
    • போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * வரும் நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.

    * சென்னை 950, மதுரை 100, கோவை 75 மின் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

    * தமிழகம் முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

    * 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

     

    * 120 கோடியில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.

    * போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மின்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×