என் மலர்
நீங்கள் தேடியது "Tomato"
- 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
- ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.
மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.
இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.
ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.
தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை.
ஒட்டன்சத்திரம்:
தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு 4 கிலோ தக்காளி அழுகி விடுவதால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றனர்.
- கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
- மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ19-க்கு விற்பனை செய்யப்பட்டது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் பெருமளவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர். இதன் காரணமாக தட்டுபாடு ஏற்பட்டு தக்காளி விலை திடீரென அதிகரித்தது.
கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ19-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.17-க்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக இனிவரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இன்று ரகத்தை பொறுத்து ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.100 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்து உள்ள போதிலும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
- பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டுக்கு தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிய தொடங்கியது.
இதனிடையே இன்று காலை பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு விற்பனையானது.
சில்லறை விற்பனை மற்றும் தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- ஒரே சமயத்தில் தக்காளிகள் விற்பனைக்காக குவிந்துள்ளதால் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
- தக்காளி பழங்களை பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது.
இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதேசமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஒரே சமயத்தில் தக்காளிகள் விற்பனைக்காக குவிந்துள்ளதால் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாட்டுத்தக்காளி கிலோ ரூ.30-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.40-க்கும் விற்பனை ஆனது.
ஆனால் இன்று காலை நேர்மாறாக நாட்டுத்தக்காளியும், ஆப்பிள் தக்காளியும் ஒரே மாதிரியாக கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் சிறிய நாட்டுத்தக்காளி கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.
தக்காளி பழங்களை பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி பயிரிட்ட பல விவசாயிகள் பழங்களை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுள்ளனர். செடியில் தக்காளிகள் அழுகி காய்ந்து கிடப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்.
- கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.
குனியமுத்தூர்:
மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது.
கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்தனர்.
நேற்றும் விவசாயிகள் வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு தக்காளிகளை கொண்டு வந்தனர். கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.
விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி தக்காளியை சாலையோரம் வீசி சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இவ்வளவு குறைவான விலைக்கு தக்காளி விற்கும் போது, லோடுமேன் இறக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க முடியவில்லை. இந்த காரணத்தால் வேறு வழியின்றி கீழே கொட்டி விட்டு செல்கிறோம் என்றனர்.
நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம்,பொங்கலூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம்.
- கடந்த ஆகஸ்ட் மாதம் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்.
கடந்த மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் பருவம் தவறி பெய்த மழையால் விளைந்த தக்காளிகள் அழுகி வீணாகி போனது. இதனால் விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து அவற்றை உரமாக மாற்றி வருகின்றனர். இது குறித்து சித்தம்பலம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம்,பொங்கலூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் பருவம் தவறி பெய்த மழையால், தக்காளிகள் செடியிலேயே அழுகிவிட்டது. மேலும் விளைந்த தக்காளியை தரம் பார்த்து பிரித்தெடுக்க தொழிலாளர்களின் கூலி அதிகமாகிறது. இதனால் தக்காளியை அறுவடை செய்தும் பயன் இல்லாததால் தக்காளியை விளைந்த நிலத்திலேயே டிராக்டர் கொண்டு அழித்து உரமாக மாற்றி வருகிறோம். தக்காளியுடன் அதற்காக செய்த முதலீடு, உழைப்பு ஆகியவை மண்ணோடு மண்ணாய் போனதுதான் மிச்சம்.
இவ்வாறு வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
- விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
- சில்லரை வர்த்தகத்திலும் தக்காளி விலை குறைந்துள்ளது என்றனர்.
உடுமலை :
உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில் 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாய் வரை விலை போனது. தற்போது ஒரு பெட்டி, 240 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து துவங்கியுள்ளதால் உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரித்து விற்பனை குறைவு காரணமாக தக்காளி விலை குறைந்து வருகிறது. சில்லரை வர்த்தகத்திலும் தக்காளி விலை குறைந்துள்ளது என்றனர்.
- 28 கிலோ எடை கொண்டு பெரிய ‘டிப்பர்’ 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
- தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி திருப்பூர் வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. சீசன் துவங்கி உள்ளதால் விளைவித்த காய்களை கொண்டு வந்து விவசாயிகள் குவிக்கின்றனர்.ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்தும் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைய துவங்கியுள்ளது.
இந்த மாத துவக்கத்தில் கிலோ 20 முதல் 25 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, நடப்பு வாரம் கிலோ 14 ரூபாயானது. தெற்கு உழவர் சந்தையில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 180 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்டு பெரிய 'டிப்பர்' 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்த விலையில் முதல் தர தக்காளி கிலோ 14 முதல் 16 ரூபாய்க்கு விற்றது. சில்லறை விலையில் தக்காளி கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கு விற்றது.கர்நாடக மாநிலம் மைசூரு தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி (சராசரியாக 30 டன்) திருப்பூர் வருகிறது.இதனால், திடீர் ரோட்டோர தக்காளி கடைகள் முளைத்துள்ளது. மொத்தமாக குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கும் வியாபாரிகள் தக்காளி 7 கிலோ 100 ரூபாய்க்கு ஆட்டோவில் கொட்டி விற்கின்றனர்.
- தக்காளி விலை வீழ்ச்சி கண்டுள்ளது
- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை
கரூர்,
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை, விவசாயிகள், அதிக அளவில் சாகுபடி செய்தனர். தற்போது, மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.கரூர் மாவட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்ப னைக்கு கொண்டுவரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது.வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, கரூர், உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 14 ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியும், விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர்.
- உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
- ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக தக்காளி,சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்தநிலையில் தக்காளி சாகுபடி என்பது பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுவதும்,விலை உயர்வு ஏற்படும் காலங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
உடுமலை பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில ங்களிலும் சமீப காலங்களாக ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.விலை சரிவால் ஏற்பட்ட வேதனையின் உச்சத்தில் விவசாயிகள் தக்காளியை சாலை ஓரம் வீசுவதும்,தக்காளி செடிகளுடன் டிராக்டர் விட்டு அழிப்பதும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.அதேநிலை தற்போதும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே ஏற்பட்டு வருகிறது.உடுமலை சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது சுமார் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 40 முதல் ரூ 80 வரை விற்பனையாகிறது.அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ .3 முதல் 5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது.இது பறிகூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுப்படி ஆகாத விலையாகவே உள்ளது.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு மாற்றுத் தொழில் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.
- கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
அதன்படி நேற்று வெள்ளகோவில் வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20-க்கும் விற்கப்பட்–டது
இதேபோல் பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், மேரக்காய் ரூ.40-க்கும், கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.