என் மலர்
நீங்கள் தேடியது "Tomato"
- நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
- இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-
கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.
கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.
- பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.
- 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார்.
பல்லடம் :
பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்கா ளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகின்றனர்.
இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபா ளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி இவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- பரம்பரை பரம்பரையாக விவசாயம்செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில்விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில்வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
- தக்காளி சாகுபடி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
- ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.
உடுமலை :
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு தென்னை,நெல்,வாழை,கரும்பு,மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியில் உரம்,பூச்சி மருந்து செலவு,கூலி உள்ளி ட்ட வை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால் போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.குறிப்பாக தக்காளி சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.அறுவடை செய்த தக்காளியை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு போய் விற்று விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலையே உள்ளது.போக்குவரத்துச் செலவு,அறுவடைக் கூலி கூட கட்டுப்படியாகாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது.இதனால் பல விவசாயிகள் தக்காளி விளைந்து கிடக்கும் நிலத்தை மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றும் நிலையும்,டிராக்டரை விட்டு உழவு ஓட்டி அழிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.
இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விலை முன்னறிவிப்புப் படி தக்காளி விலை உயரும் வாய்ப்பு உள்ளதா என்பது விவசாயிகளின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.அதேநேரத்தில் விலை உயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழ்நா டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுகிறது.விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு ஓட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி,வெண்டை,கத்தரி போன்ற காய்கறிகளின் விலையில் சந்தை ஆய்வு களை மேற்கொ ண்டது.அதன்படி நடப்பு மே மாதத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ .24 முதல் ரூ .27 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலமாக இருப்ப தால் மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தக்காளி விவசாயி களிடையே ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தக்காளியை அழித்து விட்டு மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் எண்ணத்திலிருந்த விவசாயிகளும் இந்த அறிவிப்பால் முடிவை தள்ளிப் போடுவது குறித்து யோசிக்கத் தொடங்கி யுள்ளனர்.ஆனாலும் தற்போது தக்காளி விலை உயர்வது குறித்த வேளா ண் பல்கலையின் அறிவிப்பு குறித்து நம்பிக்கையின்மையே விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.தக்காளிக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.தக்காளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகவே தக்காளி விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
- காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.140, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.
- 14 கிலோ கொண்ட பெட்டி 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.கேரள மாநிலம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.இதனால், சந்தைக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டி வரத்து காணப்படுகிறது. நடப்பு சீசனில், படிப்படியாக அதிகரித்து 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, கடந்த மாதம் 300 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடும் வறட்சி, திடீர் மழை காரணமாக நடப்பாண்டு மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன் என பெட்டிக்கு 30 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ 2 முதல் 5 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் நடப்பு சீசன் தக்காளி சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
- கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 30. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.50, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.130, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- கடந்த மார்ச் மாதத்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது.
- மேலும் விலை குறையவே வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை :
காய்கறி வகைகளை பொறுத்தவரையில் வெயில் காலத்தில் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு, விலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு அது தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது.
காய்கறி விளைச்சல் அதிகரிப்பால், வரத்து உயர்ந்து, விலை குறைந்துள்ளது. கோடைகாலத்தில் காய்கறி விலை குறைந்திருப்பது இந்த ஆண்டில்தான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் தக்காளியை பொறுத்தவரையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சி அடைந்து வருவதை பார்க்க முடிகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. பின்னர், மேலும் விலை குறைந்து கடந்த வாரத்தில் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு, நேற்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை ஆனது. நவீன் தக்காளி என்று கூறப்படும் பெங்களூரு தக்காளி மட்டும் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. நாளொன்றுக்கு 1,100 டன்களில் வரத்து இருந்த தக்காளி, தற்போது 1,400 டன் முதல் 1,500 டன் வரை வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் விலை குறையவே வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெயில் காலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்ததும், தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் வரை விலை வீழ்ச்சி அடைந்துதான் காணப்படும் என தக்காளி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், சில்லரை கடைகளில் அதைவிட கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதேபோல், பல்லாரி வெங்காயம், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்பட சில காய்கறி வகைகளின் விலையும் குறைந்திருக்கிறது.
- சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
- சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது.
சேலம்:
சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை வருமாறு:-
தக்காளி ரூ.12-18. உருளைக் கிழங்கு ரூ.30-32, சின்ன வெங்காயம் ரூ.35-55, பெரிய வெங்காயம் ரூ 18-20, பச்சை மிளகாய் ரூ.50-55, கத்தரி ரூ.45-50, வெண்டைக்காய் ரூ.12, முருங்கைகாய் ரூ.30-40, பீர்க்கங்காய் ரூ.40, சுரக்காய் ரூ.18-20, புடலங்காய் ரூ. 24, பாகற்காய் ரூ.45, தேங்காய் ரூ.25-28, முள்ளங்கி ரூ.22-24, பீன்ஸ் ரூ.75-80, அவரை ரூ.50-60, கேரட் ரூ. 60-66, மாங்காய் ரூ.20-30, வாழைப்பழம் ரூ.35-50, கீரைகள் ரூ. 15-20, பப்பாளி ரூ.24, கொய்யா-ரூ.50, சப்போட்டா ரூ.35, மாதுளை ரூ.180, சாத்துக்குடி ரூ.70.
- காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது
வெள்ளகோவில்:
வெள்ளகோ விலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செய ல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.25, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 50. உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.50, புடலை காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.50, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.120, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் புங்கனூர், வி-கோட்டா, பலமனேர், குப்பம், மதனப்பள்ளி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார், ஒட்டுப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. ரூ.15-க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் இன்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.65-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.45-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது.
தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. நேற்று 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து இருக்கிறது என்றார்.
- வழக்கமாக 80 முதல் 120 டன் வரும்.தற்போது 70 முதல் 100 டன் மட்டுமே வருகிறது.
- சில்லறை விலையில் கடைகளில் ரூ. 38 முதல் 42 வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது.ஆனால்திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து, மூன்று வாரங்களாக குறைந்து வருவதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வழக்கமாக 80 முதல் 120 டன் வரும்.தற்போது 70 முதல் 100 டன் மட்டுமே வருகிறது.
பொங்கலூர், கொடுவாய், பல்லடம், உகாயனூர், கண்டியன் கோவில் உள்ளிட்ட உள்ளூர் வரத்து குறைந்து விட்டதால், வெளிமாநில தக்காளியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 400 முதல் 450 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்ட பெரிய 'டிப்பர்' 950 முதல் 1,050 ரூபாய்க்கு விற்றது.மொத்த விலையில் தக்காளி ரூ. 32 முதல் 34 வரை விற்கப்படுவதால், சில்லறை விலையில் கடைகளில் ரூ. 38 முதல் 42 வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது.
- கோடை காலத்தில், சாகுபடி பரப்பு அதிகரித்து அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு விலை கிடைக்காது.
- நிலப்போர்வை அமைப்பதால் செடிகளுக்கு அருகிலேயே சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்சலாம்.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு பிரதான காய்கறி சாகுபடியாக தக்காளி உள்ளது.ஒவ்வொரு சீசனிலும் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தக்காளி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.வழக்கமாக கோடை காலத்தில், சாகுபடி பரப்பு அதிகரித்து அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு விலை கிடைக்காது. இந்தாண்டு மழை இல்லாதது வறட்சியான காற்று உள்ளிட்ட காரணங்களால் கோடை சீசனில் மகசூல் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து தென்மேற்கு பருவமழை துவங்கியதும், அடுத்த சீசனுக்கான நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் பருவமழை இதுவரை துவங்காமல் தாமதித்து வருவதால் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
எனவே குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நாற்று நடவு செய்யும் வகையில் நிலப்போர்வை எனப்படும் மல்ஷிங் ஷீட் அமைத்து தக்காளி நாற்று நடவு செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலப்போர்வை அமைப்பதால் செடிகளுக்கு அருகிலேயே சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்சலாம். மழை தாமதித்து வருவதால் கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தியே சாகுபடியை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றனர்.