என் மலர்
நீங்கள் தேடியது "Training of farmers"
- 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
- இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மற்றும் சென்னி மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னிமலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் குட்ட பாளையம் குப்பிச்சி பாளையம் மற்றும் இதர வருவாய் கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் அத்தியேந்தலில் சிறுதானிய மகத்துவ மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் புதிய ரகங்கள் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான எந்திரங்கள் குறித்து தலைவர் பேரா சிரியர் வைத்தியலிங்கன் மற்றும் உதவி பேராசிரி யர்கள் விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் விவசாயிகள் வயல்களில் பயிரிட்டுள்ள சிறுதானிய பயிர்களை நேரிடையாக கண்டனர். இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் 50 கிலோ சிறுதானிய விதைகளை வாங்கினர். அதை தங்கள் வயல்களில் இந்த வருடம் பயிரிட உறுதி அளித்தனர்.
மேலும் விவசாயிகள் காமாட்சி அம்மன் சிறுதானிய உற்பத்தி நிறுவனத்தின் சிறுதானிய மதிப்புகூட்டல் நிறுவனத்தை பார்வையிட்டு விபரங்களை கேட்ட றிந்தனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் சதிஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
- ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள உமரிக்காட்டில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.
- உழவர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் மனோரஞ்சிதம் வேளாண்மை வணிகத்துறையில் உள்ள திட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே எடுத்து கூறினார்.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனை மூலம், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்ட அட்மா திட்டத்தின் கீழ் அறுவடை பின்சார் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள உமரிக்காட்டில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.
பயிற்சிக்கு ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி கலந்து கொண்டு பல்வேறு பயிர்களுக்கு அறுவடை பின்சார் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். தொடர்ந்து வாழை, சிறுதானியங்கள், காய்கறிகளில் எவ்வாறு மதிப்பு கூட்டி சந்தைபடுத்துவது என விளக்க படங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
மேலும் இப்பயிற்சியில் விவசாய குழுக்களுக்கு மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வழங்கும் இடங்கள் பற்றியும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை குழுவாக எவ்வாறு சந்தைபடுத்தலாம் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
உழவர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் மனோரஞ்சிதம் வேளாண்மை வணிகத் துறையில் உள்ள திட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் பிரேம்குமார் வேளாண்மை துறையிலுள்ள திட்டங்கள் பற்றி கூறினார். வேளாண்மை வணிகத் துறையின் உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திலுள்ள வேளாண்மை வணிகத் துறையின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.
இப்பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். பயிற்சியிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை வணிகத் துறையின் உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் மற்றும் அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர்.
- நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
- வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.
இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது.
- நன்மைகள் குறித்து விளக்கினார்
குன்னூர்,
குன்னூர் தோட்டக்கலைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர்மட்டம் கிராமத்தில் விவசாய சூழல் அமைப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்து மேரக்காய் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி தலைமை தாங்கினார். இயற்கை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகள் சொந்தமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயார் செய்வதற்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில் தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.