என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tree saplings"
- கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், பராமரித்தல் விழா நடைபெற்றது.
- கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.
நெல்லை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் விழா நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.
கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பாலசுப்ரமணியம், ஆறுமுகத்தாய், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் தனி அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார்.
- திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
- விழாவில் திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், காலநிலை மாற்றத்தை வலியுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன், யூனியன் துணைத்தலைவர் ரெஜிபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள் வாசுகி, ராமலட்சுமி, செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதா, பழநி கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் பிரேம் சந்தர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) வாவாஜி மற்றும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, சங்கீதா, மதுரிதா சந்திரசேகரன், சிகரம் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விளாத்திகுளம் பகுதிகளில் மரங்கள் நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும், அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
இதில் புதூர் ஊராட்சி ஒன்றிய மணியக்காரன்பட்டி ஊராட்சி, தவசலிங்கபுரம்,
மணியக்காரன்பட்டி, சக்கனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 1 கோடி மரங்கள் வளர்ப்பதன் முன்னெடுப்பாக மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. கிராம மக்களை நேரில் சந்தித்து வேப்பமரம், புங்கைமரம் உள்ளிட்ட மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும் மரம் நடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கிராம மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
கூட்டத்தில் புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் நாகராணி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி, இம்மானுவேல், தொழிலதிபர் சுப்பா, ஊராட்சி துணை தலைவர் ராமசுப்பு, கிளை செயலாளர்கள் சூர்பாண்டி, சுப்பையா, பிரதிநிதி பெரிய தங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்
திருப்பூர்,ஆக.27-
நாட்டின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு 2021ல் நிறைவு பெற்றது; ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில், மக்களின் கலாசாரம், பண்பாடு, முற்போக்கு சிந்தனை உள்ளிட்டவற்றை பிரசாரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல், நீர், கலாசார பெருமை, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியம் உள்ளடக்கிய மேம்பாடு, ஒற்றுமை ஆகிய கருப்பொருளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
கடந்த 2021 மார்ச் 12ல் துவங்கி 75 வார இயக்கமாக நடத்தப்பட்ட இந்த இயக்கம் கடந்த 15ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதன் நினைவாக ஒவ்வொரு ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஊராட்சிகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தந்த ஊராட்சிகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களை இணைத்து மரக்கன்று நடும் திட்டத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.
- விழாவில் ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றினார்.
- கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் சுதந்திர தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 77 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபரும் தி.மு.க. நிர்வாகியுமான பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதிதாசன், ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படியும், பேரூராட்சி களின் உதவி இயக்குனர் திருச்செல்வம் அறிவுறுத்தலின் படியும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்ற தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில், செயல் அலுவலர் காயத்ரி முன்னி லையில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் வார்டு உறுப்பி னர்கள் பாரதிதாசன், ராஜ லட்சுமி, ஹாஜரா பேகம் மற்றும் ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் ஆகியோர் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி யில் ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி அலுவலக ஊழி யர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.
தென்திருப்பேரை:
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு), தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் வழிகாட்டுதலின்படி அரசு, பூவரசு, புங்கன், வேம்பு, வாகை, புளி, நாவல், சரக்கொன்றை, அலங்கார கொன்றை போன்ற 10 ஆயிரம் மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடக்க விழா ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாக்கி யம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.
இவ்விழாவில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றியக் குழு சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் பாதுகாப்பான, தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.
அதேசமயம் பனை மரங்கள் பாதுகாப்பு கூட்ட மைப்போடு இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம் என கூறினார்.
நிகழ்ச்சியில் ஆழ்வை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ராஜா, தாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் , பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், சிகரம் அறக்கட்டளை இயக்கு னர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தேசிய திருநங்கைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பின்னர் திருநங்கைகள் சார்பில்தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி யும் நாதஸ்வரம் வாசித்து ஊர்வலமாக வந்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து நடந்த விழாவில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவி திவ்யா பேசியதாவது:- உலகமெங்கும் வாழும்அனைத்து திருநங்கைகளுக்கும் தேசிய திருநங்கைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பதற்கு ஏதுவாக திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா,துணைத் தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் தர்ஷினி ,செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சௌந்தர்யா, பவானி,கௌரி உள்ளிட்ட நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார்.
- பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடப்பட்டது.
நெல்லை:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கீழநத்தம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் பலவேசம் இசக்கி பாண்டி, சுசீலா, பரமசிவன், உலகநாதன், சுரேஷ், ராமலட்சுமி, பூர்ணிமா, ராஜம்மாள், பாரதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர் முருகன், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் புளியமரம், செம்மரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளிலும் சுமார் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
- மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
- வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார்.
கடையம்:-
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது.
இந்த முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று தான் மலை மீது உள்ள முருகன் கோவிலை அடைய முடியும். இந்த மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு நிழல் ஏற்படுத்தி தருவது என தோரணமலை முருகன் கோவில் பக்தர்கள் குழு சார்பில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
கீழப்பாவூர் முன்னாள் யூனியன் சேர்மன் வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மரம் நடுவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ .செண்பகராமன் செய்திருந்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை திருநாவலூர் அடுத்த தேவியானந்தல் கிராமத்தில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில்உள்ள ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருநாவலூர் யூனியன் தலைவர் சாந்தி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேசன், ஒன்றிய கவுன்சிலர் விஜய் ஆறுமுகம்ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஆளவந்தான் ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராணி ஏழுமலை, ஊராட்சி எழுத்தர் உமா மகேஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்துதேவியானந்தல் கிராமத்தில் பொது இடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி கிராமத்தில்நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்